Kathir News
Begin typing your search above and press return to search.

எங்களுக்கு அமெரிக்காவும் வேண்டாம், சீனாவும் வேண்டாம் - தமிழகத்துக்கு மாற தயாராகும் சர்வதேச நிறுவனங்கள் : தீவிரப்படுத்தப்படும் முயற்சி!

எங்களுக்கு அமெரிக்காவும் வேண்டாம், சீனாவும் வேண்டாம் - தமிழகத்துக்கு மாற தயாராகும் சர்வதேச நிறுவனங்கள் : தீவிரப்படுத்தப்படும் முயற்சி!

எங்களுக்கு அமெரிக்காவும் வேண்டாம், சீனாவும் வேண்டாம் - தமிழகத்துக்கு மாற தயாராகும் சர்வதேச நிறுவனங்கள் : தீவிரப்படுத்தப்படும் முயற்சி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Sep 2019 3:38 AM GMT


சீனாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க-இந்திய திட்டமிடல் கூட்டுறவு அமைப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக இரு நாடுகள் இடையில் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு கொள்கையை பின்பற்றி, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ளார். இதனால், அமெரிக்காவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் சீனா, பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.


இதையடுத்து, சீன அதிபர், ஜீ ஜிங்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு, அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கு அதிக வரி விதித்துள்ளது.அத்துடன், உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியுள்ளது. இதனால், சீன நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்திஉள்ளன.இந்த போட்டியை தாக்குப் பிடிக்க முடியாமல், வலைதளங்களில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும், அமேசான் நிறுவனம், சீனாவில் இருந்து வெளியேறுவதாக, சமீபத்தில் அறிவித்தது. ஏற்கெனவே, அமெரிக்காவைச் சேர்ந்த, வாடகை கார் நிறுவனமான, ஊபர், சீனாவை விட்டு வெளியேறி விட்டது.இத்தகைய சூழலில், மேலும் பல அமெரிக்க நிறுவனங்கள், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற திட்டமிட்டுள்ளன.


சீர்திருத்தம்இது குறித்து, ‘யு.எஸ். ஐ.எஸ்.பி.எப்.,’ என, சுருக்கமாக அழைக்கப்படும், அமெரிக்க – இந்திய திட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பின் தலைவர், முகேஷ் அகி கூறுகையில், சீனாவில் செயல்பட்டு வரும், அமெரிக்காவைச் சேர்ந்த, 200 நிறுவனங்கள், தயாரிப்பு பிரிவுகளை இந்தியாவிற்கு மாற்ற ஆர்வமுடன் எங்களை அணுகியுள்ளன. இந்நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, நிலம் கையகப்படுத்துவது முதல் சுங்க வரி வரையிலான பிரச்னைகளுக்கு தீர்வு காண, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்.தொழில் துவங்கும் நடைமுறை மேலும் வெளிப்படையாகவும், விரைவான செயல்பாட்டை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, மின்னணு வர்த்தகம், தரவுகளை உள்நாட்டில் சேமிப்பது ஆகியவற்றில், மத்திய அரசின் கொள்கைகள், சர்வதேச வணிகத்தை விட, உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பிற்குத் தான், அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தன. அதனால், தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்கும் வகையிலும், நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, ஸ்திரமான வர்த்தக கொள்கைகளை வெளியிட வேண்டும் என அரசிடம் வலியுறுத்தப்படும். இந்தவகையில், அன்னிய முதலீடுகளை ஈர்க்க, மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான அறிக்கையை, கூட்டமைப்பு உருவாக்கி உள்ளது.அதில், வேலைவாய்ப்பை அதிகரித்து, ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.


ஒப்பந்தம்:


முக்கியமாக, இந்தியா – அமெரிக்கா இடையே, தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், சீனாவின் மலிவு விலை பொருட்களால் ஏற்படும் பாதிப்பை, இந்தியாவால் கட்டுப்படுத்த முடியும். அமெரிக்க சந்தையிலும் அதிக பங்களிப்பை, இந்திய நிறுவனங்களால் பெற முடியும்.இதுபோன்ற பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, மத்தியில் அமைய உள்ள அரசிடம் வழங்கப்படும். பரிந்துரைகளின் அடிப்படையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டால், சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள், தயாரிப்பு பிரிவுகளை இந்தியாவிற்கு மாற்றும். இதனால், உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும். வர்த்தகம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். இடம்பெயர இருக்கும் நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டுவரும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சர்வதேச சட்ட ஆலோசகர் ஆலோசனை நடத்தியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News