Top
undefined
Begin typing your search above and press return to search.

சிறையில் நேற்று தரை விரிப்பில் படுத்துறங்கிய சிதம்பரம் ! தூக்கம் வராமல் நெடு நேரம் தவிப்பு!! டெல்லி ஊடகங்களில் புதிய தகவல்கள்!!

சிறையில் நேற்று தரை விரிப்பில் படுத்துறங்கிய சிதம்பரம் ! தூக்கம் வராமல் நெடு நேரம் தவிப்பு!! டெல்லி ஊடகங்களில் புதிய தகவல்கள்!!

SG SuryahBy : SG Suryah

  |  6 Sep 2019 11:10 AM GMT


முன்னாள் மத்திய நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் பல்வேறு முறைகேடு வழக்குகளின் பேரில் திகார் சிறையில் முதல் நாள் சிறைவாசத்தை நேற்று அனுபவித்தார்.,


பொதுவாக அவர் அடைக்கப்பட்டுள்ள அறை பொருளாதாரக் குற்றங்களில் சிக்கி கைது செய்யப்படும் முக்கிய பிரமுகர்கள் அடைக்கப்படுவது வழக்கம். 7 வது சிறை வளாகத்தில் 15 ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு அருகில் உள்ள பகுதியில் மத்தியப்பிரதேச மாநில முதல்வர் கமல்நாத்தின் உறவினர் ரதுல்புரி, ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மைக்கேல் போன்றவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் இதே வளாகத்தில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் அங்கு 12 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். அதே வளாகத்தில் தனி அறையில் தற்போது ப.சிதம்பரமும் அடைக்கப்பட்டு உள்ளார்


இந்த நிலையில் நேற்றிரவு அவருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளையும் சாப்பிட்டார். மற்ற கைதிகளைப் போலவே நேற்றிரவு ப.சிதம்பரம் வெறும் தரையில் படுத்துறங்கினார். அவருக்கு ஒரு தலையணையும், தரை விரிப்பும் கொடுக்கப்பட்டது. கீழே படுத்து அனுபவம் இல்லாத சிதம்பரம், தூக்கம் வராமல் நெடுநேரம் தவித்துள்ளார்.


இன்று காலையில் அவருக்கு தேநீர் மற்றும் பிஸ்கெட்கள் வழங்கப்பட்டன. மதிய உணவாக அவருக்கு சப்பாத்தி, காய்கறிகள், பருப்பு, அரிசி சாதம் ஆகியவை வழங்கப்பட்டன.


மதிய உணவு நேரம் பகல் 11.30 முதல் 12.30 வரை. 3,30 மணிவரை அவர் சிறையில் அடைக்கப்படுவார். 3.30 மணிக்கு பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வந்து நூலகத்துக்கு செல்லலாம். அல்லது வேறு ஏதாவது விளையாட்டில் பங்கேற்கலாம். 6,45 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும். 9 மணி வரை அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்கப்படுவார். பிறகு அவர் தனது அறைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு சிறை அலுவலர்கள் தகவல் தெரித்ததாக இன்றைய மாலை செய்தி தாள்களில் செய்திகள் வந்துள்ளன.


Next Story