Top
undefined
Begin typing your search above and press return to search.

ஸ்டாலினுக்கும் திகார் கண்டம் உண்டாம் !! சிபிஐ கேள்விகளுக்கும் சிதம்பரம் மவுனத்துக்கும் இதுதான் காரணமாம்.!!

ஸ்டாலினுக்கும் திகார் கண்டம் உண்டாம் !! சிபிஐ கேள்விகளுக்கும் சிதம்பரம் மவுனத்துக்கும் இதுதான் காரணமாம்.!!

SG SuryahBy : SG Suryah

  |  6 Sep 2019 8:47 AM GMT


சென்ற புதன் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா பொதுவாக பேசுகையில் சிதம்பரத்தை தொடர்ந்து எதிர்கட்சி தலைவரும் சிறைக்கு செல்லலாம் என்று கூறியதாகவும், இதனை கேட்ட பத்திரிக்கையாளர்கள் உடனடியாக யார் அந்த எதிர்கட்சி தலைவர் என்று கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் ஹெச்.ராஜா சென்று விட்டதாகவும் சில பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன.


திமுக தலைவர் ஸ்டாலின் தான் தற்போது எதிர்கட்சி தலைவர். எனவே அவரை மனதில் வைத்துகூட ஹெச்.ராஜா இப்படி பேசியிருக்கலாம் என நினைத்த பத்திரிக்கையாளர்கள் நேற்று சென்னையில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினாராம்.


அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், ஆமாம் அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி பரபரப்பை உண்டாக்கினார். மேலும் ஜெயக்குமார் கூறுகையில் “ப.சிதம்பரம் சிறைக்கு சென்ற பிறகு ஸ்டாலின் மத்திய அரசை விமர்சிப்பதை குறைத்துக் கொண்டார் எனவும், மத்திய அரசுக்கு எதிரான ஸ்டாலின் பேச்சில் ஒரு மென்மை தெரிவதாகவும், சிதம்பரத்துக்கு ஆதரவாக எசக்கு..புசக்காக எதையாவது கூறி தொலைத்தால் நாமும் கம்பி என்ன வேண்டியதுதான் என பயந்துதான் ஸ்டாலின் மென்மையான போக்கை கடைபிடிப்பதாக” அதிரடியாக கூறினார் ஜெயக்குமார்.


முதல் நாள் ஹெச்.ராஜாவும் இதே போன்றதொரு கருத்தை கூற மறுநாள் ஜெயக்குமாரும் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ள நிலையில், இது குறித்து அரசியல் கணிப்பாளர்கள் கூறுகையில்: ப.சிதம்பரம் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. காங்கிரஸ் மேலிடம் மற்றும் தமிழக விஐபி க்கள் தொடர்புடைய விஷயங்களை அவர் மறைக்கிறார் என கூறப்படுகிறது. குறிப்பாக ஏர்செல் மாக்ஸிஸ் விவகாரத்தில் வெளிநாட்டு தொழிலதிபரை மிரட்டி நிறுவன பங்குகளை வாங்கியது, தங்கள் பிரபல தொலைக் காட்சியில் முதலீடு செய்ய மிரட்டியது போன்ற தமிழக விஐபி க்களின் முறைகேட்டு விவகாரங்கள் சிதம்பரம் துணையுடன் நடந்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.


அவர் துணை இல்லாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க முடியாது என விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர். இது தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்குத்தான் சிதம்பரம் மவுனம் காக்கிறார் என்றும் அதனால்தான் சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறிய விசாரணை அதிகாரிகள் அவரை சிறையில் வைத்தனர் என்றும் கூறுகின்றனர்.


இந்த நிலையில் அடுத்தகட்ட விசாரணைகளில் உண்மைகள் வெளி வந்து நாம் எங்கே மாட்டிக் கொள்வது உறுதியோ என தமிழகத்தில் முக்கியத் தலைகள் பயந்து கிடக்கின்றன. மேற்கண்ட விவகாரங்கள் உட்பட 2 ஜி யிலும் கணிசமான தொகை ஸ்டாலின் பாக்கெட்டுக்கு போயிருப்பதாக பல செய்திகள் முன்பு கசிந்தன. ஆனால் தங்கள் அரசியல் சக்தியால் அதை மூடி மறைத்தனர். அப்போது அந்த ரகசியங்களை மூடி மறைக்க உதவியாக இருந்தவர் சிதம்பரம்தானாம்.. ஆனால் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் மூலம் தெரிய வந்து விட்டால் இவருக்கும் ஆபத்துதான்.. இதை மனதில் கொண்டே அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.


Next Story