Kathir News
Begin typing your search above and press return to search.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்து போலி செய்தியை ட்விட்டரில் பரப்பும் தி.மு.க தலைவர் ஸ்டாலின்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்து போலி செய்தியை ட்விட்டரில் பரப்பும் தி.மு.க தலைவர் ஸ்டாலின்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்து போலி செய்தியை ட்விட்டரில் பரப்பும் தி.மு.க தலைவர் ஸ்டாலின்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Sep 2019 9:36 AM GMT


கேந்திரிய வித்யாலாவின் பாடப்புத்தகத்தில் இருக்கின்ற கேள்விகள் என்று கூறி ஒரு கேள்வித்தாள் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அது குறித்த விவரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.


6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற கற்றல் திறன் பக்கத்தில் தலித் என்றால் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அடுத்து டாக்டர் அம்பேத்கர் எந்தச் சமூக வகுப்பைச் சேர்ந்தவர் என்னும் கேள்வியும், அதற்கடுத்து, இஸ்லாமியர்களின் பொதுப் பண்புகள் என்ன என்ற கேள்வியும் இடம்பெற்றிருந்தது. இவை கேந்திரிய வித்யாலயாவின் 6-வது வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகள் எனவும் தகவல் பரவியது. உடனே பா.ஜ.க அரசை தூற்றும் வகையில் சில ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த கேள்வித்தாள் குறித்த செய்திகளை பரப்பின.


இது குறித்து விளக்கம் அளிக்கையில், கேந்திரிய வித்யாலய துணை ஆணையர், பள்ளிகளுடன் சோதனை செய்ததாகவும், இதுபோன்ற கேள்விகள் எந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இடம்பெறவில்லை என்றும் கூறினார். இது என்.சி.இ.ஆர்.டி (N.C.E.R.T) பாடப்புத்தகத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு பள்ளியாகவும் இருக்கலாம் என்றார்.



Screenshot from The Hindu


கேந்திரிய வித்யாலயா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும், தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள 6 ஆம் வகுப்பு கேள்வித்தாள் இப்படி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/mkstalin/status/1170258639384236032?s=19


தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், இணையத்தில் பரப்பும் இந்த போலி செய்தியை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.




https://twitter.com/sumanthraman/status/1170261049401991168?s=19




https://twitter.com/SuryahSG/status/1170263418961444864?s=19

Next Story
கதிர் தொகுப்பு
Trending News