Top
undefined
Begin typing your search above and press return to search.

சட்ட பிரிவு 370 நீக்கத்துக்கு ஆதரவாக, 370 டாக்டர்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்!!

சட்ட பிரிவு 370 நீக்கத்துக்கு ஆதரவாக, 370 டாக்டர்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  9 Sep 2019 12:33 PM GMT



கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான 370 சட்ட பிரிவை நீக்கியது. அதோடு, காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.


இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டும் வகையில், குஜராத் மாநிலத்தில் உள்ள டாக்டர்கள் 370 பேர் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர்.


மேலும் கட்சியில் இணையும் விழாவில், அகில இந்திய கதிரியக்க நிபுணர்கள்களின் சங்க தலைவர் டாக்டர் ஹேமந்த் படேல், சிறப்பு டாக்டர் கல்பேஷ்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுதொடர்பாக குஜராத் மாநில பா.ஜ.க தலைவர் ஜிதுவாகனி கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் ராஜ தந்திரம் மூலம் உலகளவில் பாகிஸ்தான் அந்நியப்படுத்தப் பட்டுள்ளது. 370-வது பிரிவு நீக்கப்பட்டது நாட்டில் ஒரு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.


மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பா.ஜ.கவில் இணைந்த 370 டாக்டர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story