Kathir News
Begin typing your search above and press return to search.

ஒட்டுமொத்த தேசத்திலும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் களையெடுக்கப்படுவார்கள்” - அமித்ஷா அடுத்த அதிரடி!!

ஒட்டுமொத்த தேசத்திலும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் களையெடுக்கப்படுவார்கள்” - அமித்ஷா அடுத்த அதிரடி!!

ஒட்டுமொத்த தேசத்திலும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் களையெடுக்கப்படுவார்கள்” - அமித்ஷா அடுத்த அதிரடி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Sep 2019 12:51 PM GMT



நமது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்தும் வகையில், தேசிய குடிமக்கள் பட்டியலை மத்திய அரசு தயாரிக்கிறது. அசாம் மாநிலத்தில் இது முதலில் அமல் படுத்தப்பட்டுள்ளது.


இதில் பங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறிய 19 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இவர்களில் யாராவது உண்மையான அசாம் மாநிலத்தவராக இருந்தால், அவர்கள் முறையான ஆவணங்களை தாக்கல் செய்து மீண்டும் குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம்.


இதுகுறித்து, 2 நாள் பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியதாவது:-


தேசிய குடிமக்கள் பட்டியல் குறித்து அனைத்து மாநிலங்களும் கலக்கத்தில் உள்ளன. அசாம் மாநிலம் என்.ஆர்.சி. தவறு என்று மற்ற மாநிலங்கள் நினைக்கின்றன. தேசிய குடிமக்கள் பட்டியல் மூலம் நிறையபேர் விடுபடும் அபாயம் இருக்கிறது என்று நினைக்கின்றனர்.


அசாமில் நீக்கப்பட்டவர்கள், அசாமைவிட சிறு மாநிலங்களுக்கு படை எடுக்கலாம் என அஞ்சுகிறேன்.


இந்த நேரத்தில் நான் ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்த்த விரும்புகிறேன். அசாம் குடிமக்கள் பட்டியலில் இடம்பெறாதவற்கள், அசாமில் மட்டுமல்ல வேறு எந்த மாநிலத்திலும் வசிக்க முடியாது.


அசாம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திலும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் களையெடுக்கப்படுவார்கள். சட்டவிரோதமாக குடியேறியவர்கள், அசாமில் மட்டுமல்ல வேறு எந்த மாநிலத்திலும் இருக்க முடியாது.


இவ்வாறு அமித்ஷா குறிப்பிட்டார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News