Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி அரசின் வெற்றி! கறுப்பு பண முதலைகள் பட்டியலை வெளியிட்டது சுவிஸ் வங்கி!

மோடி அரசின் வெற்றி! கறுப்பு பண முதலைகள் பட்டியலை வெளியிட்டது சுவிஸ் வங்கி!

மோடி அரசின் வெற்றி! கறுப்பு பண முதலைகள் பட்டியலை வெளியிட்டது சுவிஸ் வங்கி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Sep 2019 1:12 AM GMT


சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்த இந்தியர்களின் முதல் பட்டியலை சுவிஸ் அரசு மத்திய அரசிடம் அளித்துள்ளது. கருப்பு பண பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பயந்து அவர்களின் வங்கி கணக்கை அவசரம் அவசரமாக முடித்துள்ள தகவலும் வெளிவந்துள்ளது.


சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் அரசுக்கு எதிரான கறுப்பு பணத்தை பதுக்குவோரின் சொர்க்க பூமியாக விளங்குகின்றது. சுவிஸ் வங்கிகளில் கணக்கு துவங்குவதற்கு கடுமையான விதிமுறைகள் என்ற எதுவும் பின்பற்றப்படுவதுஇல்லை. அதனால் எளிதாக கறுப்பு பண முதலைகள் ஏதாவது ஒரு அடையாளத்தின் அடிப்படையில் கணக்கு துவங்கி தங்கள் சொந்த நாட்டில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக இந்த வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்குவது வழக்கம்.குறிப்பாக இந்தியாவை சேர்ந்த ஏராளமான தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த வங்கிகளில் கறுப்பு பணத்தை கோடி கணக்கில் பதுக்கி வைத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு பொறுப்பேற்றதும் இந்த கறுப்பு பணத்தை மீட்கவும் பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.


நேரடி வரிகள் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சுவிஸ் நாட்டிற்கு சென்று கருப்பு பண பதுக்கல் குறித்து ஆலோசனை நடத்தினர். அதேபோல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்தியாவிற்கு வந்து ஆலோசனை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் வங்கி கணக்கு விபரங்களை பரிமாறிக் கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி வங்கி கணக்கு தகவல்களை தானாகவே பரிமாறிக் கொள்ளும் நடைமுறை இந்த மாதத்திலிருந்து அமலுக்கு வந்தது. சுவிஸ் அதிகாரிகள் தங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் அடங்கிய விபரங்களை மத்திய அரசிடம் சமீபத்தில் அளித்தனர்.


வங்கி கணக்கு எண், கணக்கில் இருக்கும் நிலுவை தொகை, எங்கிருந்து பணம் வருகிறது என்பது போன்ற விபரங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த விபரங்களின் ரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தம் உள்ளது. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த விபரங்களில் அவர்கள் வங்கிகளில் பயன்படுத்தி வரும் பெயர், முகவரி, பிறந்தநாள், வரி செலுத்தும் அடையாள எண் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கும். அத்துடன் அவர்கள் சுவிஸ் நாட்டில் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர் என்ற விபரமும் இடம் பெற்றிருக்கும்.


தற்போதுள்ள ஒப்பந்தப்படி சுவிஸ்நாட்டு வங்கியில் ஒரு இந்தியர் கணக்கு வைத்திருந்தால் அவரது கணக்கு விபரங்கள் சுவிஸ்நாட்டு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்; அது முழுமையாக இந்திய வரித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுவிடும். அதன்படி வரி ஏய்ப்பவர்கள் மீது இந்திய வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும்.


தற்போது அனுப்பப்பட்டுள்ள கணக்கு விபரங்கள் 2018ம் ஆண்டு வரையிலான கருப்பு பண முதலைகளின் பட்டியல். 2018- ல் ஒரு முறை சுவிஸ் வங்கிக்கணக்கை பயன்படுத்தி இருந்தாலும் அந்த கணக்குக்கு எங்கிருந்து பணம் வந்தது; அந்த கணக்கில் இருந்து பணம் எங்கு சென்றது என்ற முழு விபரமும் திரட்டப்பட்டு இந்தியாவிற்கு வழங்கப்படும். இது குறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பண பதுக்குவோருக்கு எதிராக சர்வதேச அளவில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட பின் இந்த ரகசிய கணக்குகளில் இருந்து சமீப ஆண்டுகளில் பெரும் தொகை வெளியேறியுள்ளது. ஏராளமானோர் வங்கிக் கணக்குகளை அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டுள்ளனர். இவர்களில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News