Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்துக்கு சிக்கல் அப்ரூவர் இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்துக்கு  சிக்கல் அப்ரூவர் இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  10 Sep 2019 6:18 AM GMT


ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாறியவரும், தனது மகளைக் கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கடந்த கைது செய்யப்பட்டு . திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குனர்களின் ஒருவரான இந்திராணி முகர்ஜி மற்றும் அவரின் கணவர் பீட்டர் முகர்ஜி இருவரும் ப.சிதம்பரத்தைச் சந்தித்துள்ளனர்.


அப்போது வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் முதலீடு வருவதற்கு உதவி செய்யுமாறு ப சிதம்பரத்திடம் கேட்டுள்ளனர். கைமாறாக சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனத்தில் இந்திராணி முகர்ஜியை முதலீடு செய்யுமாறு ப சிதம்பரம் கூறியுள்ளார். அதனால் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனத்தில் இந்திராணி முகர்ஜி முதலீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இந்த வழக்கில் அப்ரூவராக மாறினார் இந்திராணி முகர்ஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், இந்திராணி முகர்ஜி அவரின் வாக்குமூலத்தை சிபிஐயிடம் வழங்கியுள்ளார். அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டதாவது;


ப.சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு முதலீடு வருவதற்கு உதவி செய்தார் எனவும். அதற்கு பதிலாக கார்த்தி சிதம்பரம் நடத்தும் நிறுவனத்தில் நாங்கள் முதலீடு செய்தோம் என வாக்குமூலம் அளித்தார்.


இந்நிலையில் சி.பி.ஐ ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வருகின்றது, ஏற்கனவே அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜியிடம் மீண்டும் விசாரிக்க அனுமதி வேண்டும் என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தது.


இந்த மனுவை ஏற்று கொண்டு விசாரித்த சிறப்பு நீதிபதி ஜே.சி.ஜெகதலே, இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐக்கு அனுமதி வழங்கினார். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இந்திராணி முகர்ஜியிடம் சி.பி.ஐ விசாரணை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story