Top
undefined
Begin typing your search above and press return to search.

வைரல் வீடியோ - "நான் ஒரு இந்தியன்" சன் டி.வி பத்திரிகையாளரின் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த இஸ்ரோ தலைவர் சிவன்

வைரல் வீடியோ - "நான் ஒரு இந்தியன்" சன் டி.வி பத்திரிகையாளரின் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த இஸ்ரோ தலைவர் சிவன்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  10 Sep 2019 4:05 AM GMT


தமிழகித்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் தமிழகத்தில் பிரிவினைவாதத்தை வளர்க்கும் வகையில் கருத்துக்களை பரப்பி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் இஸ்ரோ தலைவர் Dr. சிவன்.


இஸ்ரோ தலைவர் Dr. சிவன் அவர்களிடம் கேள்வி கேட்கும் அந்த பத்திரிகையாளர், "ஒரு தமிழர் பெரிய பதவிக்கு வந்துள்ளீர்கள். உங்கள் பள்ளி, கல்லூரி, மாவட்டம் மட்டும் அல்ல, தமிழகமே கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழக மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?", என்று அந்த பத்திரிகையாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த இஸ்ரோ தலைவர் Dr. சிவன், "முதலில் நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் தமிழன், மலையாளி, கன்னடன் என்று பிரித்துபார்பவன் இல்லை. நான் ஒரு இந்தியன். பல மொழி பேசுபவர்கள் சேர்ந்தவர்கள் இஸ்ரோ-வில் ஒன்றாக பணிபுரிகிறோம். ஒரு மொழி பேசுபவர்களோ அல்ல ஒரு பகுதியை சேர்ந்தவர்களுடைய பங்களிப்பு மட்டும் இல்லை. அனைவரும் ஒன்றாக பணிபுரிகிறோம். ஆனால், என்னுடடைய கிராம மக்கள், என்னுடைய சகோதர சகோதரிகள் ஆகியோர்களின் அன்பிற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்", என்று பதிலளித்துள்ளார்.




https://twitter.com/SuryahSG/status/1171255343516536832?s=19




https://twitter.com/Ethirajans/status/1171227749760954368?s=19




https://twitter.com/BMSURANA/status/1171252904214183936?s=19




https://twitter.com/MunimaOffl/status/1171270859568205830?s=19


இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பலராலும் அதிகமாக பகிரப்படு வருகிறது.


Next Story