Kathir News
Begin typing your search above and press return to search.

சிதம்பரத்தின் அடுத்த மோசடி பங்குச்சந்தையில் திடுக்கிடும் தகவல் !

சிதம்பரத்தின் அடுத்த மோசடி பங்குச்சந்தையில் திடுக்கிடும் தகவல் !

சிதம்பரத்தின் அடுத்த மோசடி பங்குச்சந்தையில் திடுக்கிடும் தகவல் !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Sep 2019 2:42 AM GMT


என்எஸ்இ [NSE] எனும் தேசியப் பங்குச் சந்தையின் கணினி தகவல்களை சேமிக்கும் இடத்தின் அருகில் இருக்கும் சர்வரை 'கோ லொகேஷன்' என சொல்வார்கள். இந்த நிலையில் இந்த சர்வரை பயன்படுத்தி கொள்ள அனுமத்தி வழங்கியதில் பல கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது. இதில்,முன்னாள் அமைச்சர், ப.சிதம்பரத்தை விசாரிக்க கோரி ' தொழிலதிபர் ஜிக்னேஷ் ஷா தெரிவித்துள்ளார்.


பிரபல தொழிலதிபர், ஜிக்னேஷ் ஷா, இவர் பங்கு சந்தைகளில் காலூன்றி மிக பெரிய சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவர். 6 கண்டங்களில், 14 பங்குச் சந்தைகளை நடத்தி வந்தார். எம்சிஎக்ஸ் MCX எனப்படும், பொருட்களுக்கான பங்குச் சந்தையையும் இவர் தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய, எப்.டி, நிறுவனம் 5,600 கோடி ரூபாய் மோசடி செய்ததாக காங்கிரஸ் ஆட்சியில் திடீரென வழக்குகள் போடப்பட்டன. இதனையடுத்து, இவர் தனது அனைத்து தொழில்களையும் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில், இவருடைய, 63 மூன்ஸ் என்ற குழுமம் , மும்பைகோர்ட்டில் ப. சிதம்பரத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.


காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் மற்றும் 2 வருமான வரித் துறை அதிகாரிகள் திட்டமிட்டு, விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து எங்களின் நிறுவனங்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்கு இழப்பீடாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க உத்தரவிடக் கோரியும், வழக்கு தொடரப்பட்டுள்ளது.


ஜிக்னேஷ் ஷா கூறியதாவது : தேசிய பங்குச் சந்தையில், 2010 ஆம் ஆண்டில், 'கோ லொகேஷன்' எனப்படும் புதிய வசதி தொடங்கப்பட்டது , பங்குச் சந்தையின், சர்வருக்கு பக்கத்தில் இருக்கும் சர்வரை , பணம் செலுத்தி, புரோக்கர்களுக்கு கணினிகளை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.


இதன் மூலம், பங்குச் சந்தையின் விபரங்கள் முதலீட்டாளர்களுக்கு கிடைப்பதற்கு முன் புரோக்கர்களுக்கு கிடைத்துவிடும். பங்குச் சந்தை பொறுத்தவரை முந்திக்கொண்டு செல்வதுதான் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும், ஒரு சில விநாடிகள் முந்திக் கொண்டாலே, பல கோடி ரூபாய் லாபம் பார்க்க முடியும்.


இந்த, 'கோ லொகேஷன்' வசதி அளிக்கப்பட்டது குறித்து எந்த அமைப்பிற்கும், தகவல் அளிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக, முறையான அனுமதி பெறாமல் , அன்றைய மத்திய நிதி அமைச்சராக இருந்த ப சிதம்பரத்தின் ஆதரவோடு இந்த மோசடி வசதி கொண்டு வரப்பட்டுளள்து.


இந்த மோசடிக்கு சாதகமாக தனக்கு நெருக்கமான அதிகாரிகளை, தேசிய பங்குச் சந்தை, செபி அமைப்புகளில் , ப.சிதம்பரம் நியமித்துக்கொண்டார். இந்திய பங்குச் சந்தையில், தேசியப் பங்குச் சந்தைக்கு போட்டியாக நாங்கள் இருந்ததால், எங்களை அழிக்கும் வகையில் ,இந்த மோசடி சம்பவத்தை சிதம்பரம் செய்தார்.


இதனால்,எங்களின் குழுமத்திற்கு பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. அதைவிட, பங்குச் சந்தையில், பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடி சம்பவத்தால் சிதம்பரத்துக்கு கிடைத்த பண வரவு குறித்து விசாரிக் கப்பட வேண்டும்.


உலகின் மிகப் பெரிய நிதி வர்த்தக மையமாக இந்தியா மாறியிருக்ககூடும். ஆனால், அது சிதம்பரம் போன்றோரால் தடுக்கப்பட்டுள்ளது, அதற்கான முயற்சிகளை தற்போது எடுத்தாலும், அந்த நிலையைப் பெற முடியாத நிலையில் உள்ளது.


மத்தியில் வலுவான மத்திய அரசு உள்ளது. தவறு செய்தவர்களுக்கு எதிராக, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தீவிரமாக உள்ளனர். அதனால், இதில் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். என கூறினார் தொழிலதிபர் ஜிக்னேஷ் ஷா


Next Story
கதிர் தொகுப்பு
Trending News