Top
undefined
Begin typing your search above and press return to search.

தினகரன் எந்த கட்சியில் இணையப் போகிறார் ? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆரூடம்!!

தினகரன் எந்த கட்சியில் இணையப் போகிறார் ? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆரூடம்!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  11 Sep 2019 7:36 AM GMT


தமிழக முதல்வருடன் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று (புதன்கிழமை) தனது சொந்த மாவட்டமான விருதுநகருக்கு வருகை தந்தார்.


அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "


73 ஆண்டுகள் வரலாற்றில் வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை அழைத்து அந்நிய முதலீட்டை கொண்டு வந்த ஒரே முதல்வர் பழனிச்சாமி.


இந்தியாவிலேயே தொழில்துறையில் முதல் மாநிலமாக தமிழகம் மாறும் அளவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார்.


இந்த நிலையில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து மு.க.ஸ்டாலின். வெள்ளை அறிக்கை கேட்கிறார். நாங்கள் ஒன்றும் அந்தமானில் தொழில்களை துவங்கபோவது இல்லை, தமிழகத்தில் தான் துவங்குகிறோம், தவறான தகவல்கள் அளித்து ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை, ஏமாற்றும் எண்ணத்தில் தமிழர்களின் மானத்தை, உழைப்பை, உயிரை வைத்து சம்பாதித்தவர்கள் திமுகவினர்தான்.


வெளிநாடு சுற்றுபயணம் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி கேளுங்கள் தமிழக முதல்வர் அதற்கு உரிய பதில் மற்றும் விளக்கங்கள் அளிப்பார். மேலும், மு.க.ஸ்டாலின் அவர் என்ன கணக்குப்பிள்ளையா? நாங்கள் அவரிடம் கணக்கு காண்பிக்க, அனைத்து தொழிற் திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும்" எனக் கூறினார்.


கடைசியாக அவர் கூறுகையில், டிடிவி தினகரனுக்கு இனி எந்த அரசியல் வாழ்க்கையும் கிடையாது அவர் கூடாரம் காலியாகிக் கொண்டே வருகிறது. விரைவில் திமுகவில் அவர் சேர்ந்துவிடுவார் என்றார்.


Next Story