Top
undefined
Begin typing your search above and press return to search.

விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதிய திட்டம்! பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!!

விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதிய திட்டம்! பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!!

SG SuryahBy : SG Suryah

  |  12 Sep 2019 10:02 AM GMT



சிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பாஜக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது.


இதனைத்தொடர்ந்து, 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இது அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு “பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.





விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று, ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்தது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். விழா மேடையில் அவர் ஓய்வூதிய பயனாளிகளுக்கு, திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை வழங்கினார்.


2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயனடையலாம். 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து, மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும். அவர்கள், 60 வயதுக்கு பிறகு, அவர்களுக்கு மாதந்தோறும் குறைந்த பட்சம் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.


Next Story