Kathir News
Begin typing your search above and press return to search.

நிதின் கட்கரி வேண்டுகோள் ஏற்பு! போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை பாதியாக குறைத்தது உத்தரகண்ட் அரசு!!

நிதின் கட்கரி வேண்டுகோள் ஏற்பு! போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை பாதியாக குறைத்தது உத்தரகண்ட் அரசு!!

நிதின் கட்கரி வேண்டுகோள் ஏற்பு! போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை பாதியாக குறைத்தது உத்தரகண்ட் அரசு!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Sep 2019 10:23 AM GMT


புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அனைத்து மாநிலங்களும் இதனை படிப்படியாக அமல்படுத்தி வருகின்றன.


இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒடிசாவில் சரக்கு லாரி ஒன்றின் ஓட்டுநரிடம் உரிமம் இல்லாதது உட்பட பல விதிமீறல்களுக்காக அவருக்கு ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டது.


டெல்லியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் போதையில் இருந்ததாக போலீஸார் அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர். லாரி டிரைவர் ஒருவருக்கு ரூ. 1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. இது போன்ற பல சம்பவங்கள் நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இதையடுத்து மாநில அரசுகள் அபராதத்தை குறைத்துக் கொள்ளலாம் என மத்திய சாலைப்போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.


இதையடுத்து புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி விதிக்கப்பட்ட பல்வேறு அபராத தொகைகளையும் பல்வேறு மாநில அரசுகளும் குறைத்து வருகின்றன. முதன் முதலாக உத்தரகண்ட் மாநில அரசு 50 சதவீத கட்டணக் குறைப்பை அமல்படுத்த உள்ளது.


இதுகுறித்து அம் மாநில அமைச்சர் கவுஷிக் கூறுகையில்: சிறுவர்கள் வண்டி ஓட்டினால் உரிமையாளருக்கு விதிக்கப்படும் அபராதம் 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 2,500 ஆக குறைக்கப்படுகிறது.


மொபைல் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 5,000-ல் இருந்து ரூ. 2,500 ஆக குறைக்கப்படுகிறது. போலி நம்பர் பிளேட்டுடன் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 10,000-ல் இருந்து ரூ. 5 ஆயிரமாக குறைக்கப்படுகிறது. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 2,500 ஆக குறைக்கப்படுகிறது.


ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரமாக குறைக்கப்படும். இந்த அபராதங்கள் குறைக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


https://www.hindutamil.in/news/india/515277-now-uttarakhand-to-reduce-traffic-violation-fines-under-mv-act.html


Next Story
கதிர் தொகுப்பு
Trending News