Top
undefined
Begin typing your search above and press return to search.

“தமிழகத்தில் கல்லூரி நடத்தி ரூ.42 கோடி ஊழல் செய்த ஒருவர் கைதாவார்" - ஹெச்.ராஜா அதிரடி!!

“தமிழகத்தில் கல்லூரி நடத்தி ரூ.42 கோடி ஊழல் செய்த ஒருவர் கைதாவார்" - ஹெச்.ராஜா அதிரடி!!

SG SuryahBy : SG Suryah

  |  12 Sep 2019 7:08 AM GMT



காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், தான் நிதியடைச்சராக இருந்தபோது முறைகேடாக அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தது உள்பட பல்வேறு பண மோசடி வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதேபோல மற்றொரு காங்கிரஸ் தலைவராக கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாரும் மண மோசடி வழக்கில் கைதாகி தற்போது அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளார்.


மோசடி பேர்வழிகள் அடுத்தடுத்து கைதாவது குறித்து பா.ஜ.க தேசிய ஜெயலாளர் ஹெச.ராஜா கருத்து தெரிவித்தார். இதுதொடர்பாக மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-


ப.சிதம்பரம் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை அடுத்து, தமிழகத்தில் கல்லூரி நடத்தி 42 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ள ஒருவரும் கைது செய்யப்படுவார்.


விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக்கடனை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் நிறுத்தப் போவதாக பொய்யான தகவல்களை தி.மு.கவினர் பரவி வருகின்றனர்.


நாட்டில் பொருளாதார பாதிப்பு ஏற்படவில்லை. பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி பிரதமர் நரேந்திர மோடி நாட்டை கொண்டு செல்கிறார்.


இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.


Next Story