Top
undefined
Begin typing your search above and press return to search.

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க நாங்கள் தயார்” - ராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு!!

SG SuryahBy : SG Suryah

  |  12 Sep 2019 12:19 PM GMT



காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் பாகிஸ்தானின் அட்டூழியங்கள் முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது.


இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தக்க வைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஈடுபட்டுள்ளார். அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.


இதற்கிடையில், “பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியைகளை மீட்டெடுத்து, அதை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதே மத்திய அரசின் அடுத்த இலக்கு” என்று மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்திருந்தார்.


இது குறித்து பதிலளித்த ராணுவ தளபதி பிபின் ராவத், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும் என அரசு முடிவெடுத்தால், ராணுவம் உள்பட நாட்டின் அனைத்து துறைகளும் அரசின் உத்தரவை ஏற்று செயல்படும். அரசின் உத்தரவுகளை செயல்படுத்த ராணுவம் எப்போதும் தயாராகவே உள்ளது” என்று தெரிவித்தார்.




https://twitter.com/ANI/status/1172076599992147969

Next Story