Top
undefined
Begin typing your search above and press return to search.

மீண்டும் எழுச்சி பெற ஆர்.எஸ்.எஸ் நடைமுறைகளை காப்பியடிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு ! திறமை மிக்க தொண்டர்களை தேடிப் பிடிக்க உத்தரவாம்!!

மீண்டும் எழுச்சி பெற ஆர்.எஸ்.எஸ் நடைமுறைகளை காப்பியடிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு ! திறமை மிக்க தொண்டர்களை தேடிப் பிடிக்க உத்தரவாம்!!

SG SuryahBy : SG Suryah

  |  13 Sep 2019 6:03 AM GMT


ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ள திறமையான, தன்னலமற்ற தேசபக்தி மிகுந்த தொண்டர்கள் அடையாளம் காட்டப்பட்டு பாஜகவில் அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவது வழக்கம். பின்னர் அரசு அதிகாரங்களிலும் அவர்களுக்கு பொறுப்புகள், பதவிகள் வழங்கப்படுகின்றன. இதனால் கட்சி இன்று மக்களிடையே செல்வாக்கு மிகுந்ததாக வளர்ந்துள்ளதுடன் அடுத்தடுத்து பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்து வருவதாக பெருமையுடன் பேசப்படுகிறது.


இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மக்களிடையே முழு அளவில் செல்வாக்கு இழந்துள்ளது. கட்சியில் வலிமையான, திறமையான தலைவர்கள் இல்லை என்ற கருத்து பரவத் தொடங்கியுள்ளது. பல பிரமுகர்கள், தொண்டர்கள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். இந்த நிலையில் பழைய பரம்பரை பெருமைகள் மற்றும் அந்தஸ்தை வைத்து இனி அரசியல் செய்ய முடியாது என்றும், தற்போதுள்ள நிலையில் பாஜகவை எதிர் கொள்வது கடினம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்து விட்டது.


எனவே ஆர்.எஸ்.எஸ். நடைமுறைகளை கடை பிடிக்க அக் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கட்சியின் சித்தாந்தம் மற்றும்  கொள்கைகளில் மிகவும் ஈடுபாடுஉள்ளவர்களையும், திறமைசாலிகளையும்  கண்டுபிடித்து, ஆர்.எஸ்.எஸ்.  போல தேச பக்தி அடங்கிய முறையான பயிற்சி அளித்து, அவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகளை கொடுக்க, காங்கிரஸ்  கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்த, காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


https://www.dinamalar.com/news_detail.asp?id=2366166


Next Story