Top
undefined
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் நிலம் வாங்கி சுற்றுலா தலம் அமைக்க கர்நாடக அரசு திட்டம் : ஜம்மு - காஷ்மீர் ஆளுநருக்கு கடிதம் அனுப்ப முடிவு!!

காஷ்மீரில் நிலம் வாங்கி சுற்றுலா தலம் அமைக்க கர்நாடக அரசு திட்டம் : ஜம்மு - காஷ்மீர் ஆளுநருக்கு கடிதம் அனுப்ப முடிவு!!

SG SuryahBy : SG Suryah

  |  13 Sep 2019 12:06 PM GMT


காஷ்மீரில் நிலம் வாங்க மகாராஷ்டிரா மாநிலம் முடிவு செய்த நிலையில் கர்நாடகா அரசும் அங்கு நிலம் வாங்கி சுற்றுலா தலம் அமைக்க முடிவு செய்துள்ளது.


இதையடுத்து மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு காஷ்மீரில் நிலம் வாங்க முடிவு செய்து, 2 சுற்றுலா தலங்கள் கட்ட அமைச்சரவை ஒப்புதலையும் பெற்றது. இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக அரசும் நிலம் வாங்க முடிவு செய்துள்ளது.


இது குறித்து கர்நாடக மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரவி கூறுகையில், ‘காஷ்மீரில் சுற்றுலா தலம் அமைக்க நிலம் வாங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவையில் வைக்க இருக்கிறோம்.


இதற்கு முறையான அனுமதி கிடைத்தபின்னர் மாநில அரசுக்கும், ஜம்மு காஷ்மீர் ஆளுநருக்கும் கடிதம் எழுத உள்ளோம்’ என கூறியுள்ளார்.


Next Story