Top
undefined
Begin typing your search above and press return to search.

வெள்ளைக்கொடி காட்டி இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான் - எல்லையில் அத்துமீற நினைத்து இரு உடலை தூக்கி சென்ற சம்பவம்.!

வெள்ளைக்கொடி காட்டி இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான் - எல்லையில் அத்துமீற நினைத்து இரு உடலை தூக்கி சென்ற சம்பவம்.!

SG SuryahBy : SG Suryah

  |  14 Sep 2019 6:53 AM GMT


எல்லையில் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்களின் உடலை பாகிஸ்தான் ராணுவம் வெள்ளை கொடி காட்டி மீட்டு சென்றது. ஹாஜிபூர் பகுதியில் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தந்த பதிவடியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.


எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த 10 ஆம் தேதி, ஹஜிபூர் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே, அத்துமீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. 10 பயங்கரவாதிகளை இந்தியாவுக் குள் ஊடுருவ செய்வதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இதற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். அவர்களில் 2 வீரர்களின் உடல்களை, வெள்ளைக் கொடியை காட்டியபடி இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் வீரர்கள், எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ இப்போது வெளியிடப்பட்டுள்ளது.


Next Story