Top
undefined
Begin typing your search above and press return to search.

விளம்பரதிற்காக விளையாட்டு வீரரிடம் விளையாடிய டி.ஆர்.பாலு மகன்!! #விளம்பரதிமுக

விளம்பரதிற்காக விளையாட்டு வீரரிடம் விளையாடிய  டி.ஆர்.பாலு மகன்!!  #விளம்பரதிமுக

SG SuryahBy : SG Suryah

  |  15 Sep 2019 11:25 AM GMT



பளு தூக்கும் போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்ற மன்னார்குடியை சேர்ந்த கோவிந்தசாமிக்கு கனடா செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அங்கு சென்று வர சில லட்சம் செலவாகும் என்பதால் அவருடைய பயணம் கேள்விக் குறியானது.


இந்த நிலையில், பத்திரிகைகளில் அவர் குறித்த செய்திகள் வந்தன. செய்தியை பார்த்ததும் சசிகலாவின் உறவினரான திவாகரன் மகன் ஜெயானந்த் தங்களது போஸ் மக்கள் பணியகம் சார்பில் ரூ.1.30 இலட்சம் அளித்து உதவி செய்தாராம்.


இதைக் கேள்விப் பட்டதும் அந்த பகுதியில் ஏட்டிக்கு போட்டியாக அரசியல் செய்யும் திமுக எம்.எல்.ஏவும், டி.ஆர்.பாலு மகனுமான டி.ஆர்.பி ராஜா கோவிந்தசாமியை வரவழைத்து தன் அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளார். தி.மு.க ஆதரவு பத்திரிக்கையாளர்கள் மூலம் படம் எடுத்துக் கொண்டதுமில்லாமல் செய்தியை படு ஜோராக வெளியிட்டுக் கொண்டார்களாம்.


ஆனால் படம் எடுத்து செய்தி போட்டுக் கொண்டார்களேத் தவிர கோவிந்தசாமிக்கு பணம் எதுவும் தரப்படவில்லையாம். சமீபத்தில் கோவிந்தசாமி வெளியிட்ட வீடியோவில் கூட திவாகரன் மகன் ஜெயானந்த் ரூ.1.30 இலட்சம் உதவி செய்ததை மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.


இந்த வீடியோவோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த டி.ஆர்.பி ராஜா கோவிந்தசாமிக்கு தேவையான சில உபகரணங்களை மட்டும் வாங்கிக் கொடுத்தார் என சில தகவல்கள் கூறினாலும் அதுவும் உண்மை இல்லையாம். யாரோ இடையில் உள்ள சிலர் தவறு செய்கிறார்களாம். கோவிந்தசாமி வெளியிட்ட வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த தி.மு.கவினர் சிலர் கோவிந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டி அவர்களுடைய செல்போன் மூலமே முக நூலில் டி.ஆர்.பி ராஜாவும் உதவி அளித்ததாக பதிவு செய்தனர் என லோக்கல் அதிமுகவினர் கூறியுள்ளனர்.


ஆனால் டி.ஆர்.பி ராஜா தரப்பு இதை எல்லாம் மறுத்ததுடன் , தாங்கள்தான் கோவிந்தசாமிக்கு விசா உட்பட அனைத்து உதவிகளையும் செய்துள்ளதாக மார் தட்டி வருகின்றனர். இப்படி கேலிக்கூத்தாக விளம்பரம் தேடிக் கொள்ளும் தி.மு.கவினர் விளையாட்டு வீரர்களிடமே இப்படி விளையாடலாமா எனவும், விளையாட்டிலும் அரசியலா எனவும் பொதுமக்கள் தரப்பில் பேசிக் கொள்கிறார்களாம்.





Next Story