Top
undefined
Begin typing your search above and press return to search.

கோவில், ரெயில் நிலையங்களை தகர்க்கபோவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்!!

கோவில், ரெயில் நிலையங்களை தகர்க்கபோவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்!!

userBy : user

  |  16 Sep 2019 10:26 AM GMT

நவராத்திரி திருவிழா வருகிற 29-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இந்து ஆலயங்களில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நவராத்திரி தசரா திருவிழாவை சீர்குலைக்க போவதாக பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது என்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் மசூத் அகமது, அரியானா மாநில ரெயில்வே போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கராச்சியல் இருந்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அரியானா மாநிலம் ரோதக் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு யஷ்பால் மீனா, பெயருக்கு தபால் நிலைய சேவை மூலம் வந்துள்ள அந்த கடிதம் இந்தியில் எழுதப்பட்டுள்ளது.
அந்த மிரட்டல் கடிதத்தில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் உள்ள 12 ரெயில் நிலையங்களையும், முக்கிய இந்து ஆலயங்களையும் குண்டு வைத்து தகர்ப்போம். அக்டோபர் 8-ஆம் தேதி இந்தியாவில் தசரா திருவிழா நடைபெறும்போது நாங்கள் குண்டு வைப்போம்.

இவ்வாறு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மும்பை, சென்னை, பெங்களூரு, ரோதக், ரிவாரி, ஹிதர் உள்பட 12 ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களுக்குள் வருபவர்களை சாதாரண உடை அணிந்த போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
பயங்கரவாதிகள் கைவரிசை காட்ட முடியாதபடி தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் ரெயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில்களில் கைவரிசை காட்ட போவதாகவும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் அச்சுறுத்தி உள்ளதால், தசரா திருவிழா நடக்கும் முக்கிய கோயில்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு வரும் பக்தர்களை முழுமையாக சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மைசூர் தசரா திருவிழா பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story