Top
undefined
Begin typing your search above and press return to search.

“நன்றி மறந்தவர்கள் தமிழர்கள், என்று சொல்ல வைத்து விட்டார்களே” - பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை!!

“நன்றி மறந்தவர்கள் தமிழர்கள், என்று சொல்ல வைத்து விட்டார்களே” - பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை!!

userBy : user

  |  16 Sep 2019 11:09 AM GMT

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க மீனவரணி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 69 பேருக்கு இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
அமித்ஷாவின் கருத்தை பற்றி யோசிப்பதற்கு முன்பு இன்னொரு கருத்தை முக்கியமாக யோசிக்க வேண்டும்.
நமது தமிழ்மொழி, சமஸ்கிருதத்தைவிட உலகிலேயே பழமையான மொழி என்று இந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக அறிவித்தார்.
இதை தமிழர்கள் கொண்டாடி இருக்க வேண்டுமல்லவா? அரபு, கிரேக்க மொழிகளைவிட தமிழ் மொழி பழமையானது என்ற வரலாற்று பதிவை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டு சென்றிருக்க வேண்டுமல்லவா?
கொண்டாடி இருக்க வேண்டும். அது தமிழின் கொண்டாட்டம். தமிழர்களின் கொண்டாட்டம். அதை கொண்டாடாமல் நன்றி மறந்தவர்கள் தமிழர்கள், என்று சொல்லவைத்துவிட்டார்களே.
பிரதமரின் அந்த கருத்தை வரவேற்று சட்டமன்றத்திலேயே நன்றி சொல்லி இருக்க வேண்டாமா?
தமிழ், தமிழர்கள் என்று மார்தட்டும் தி.மு.க. உள்பட அத்தனை கட்சிகளும் கொண்டாடி இருக்க வேண்டும். பிரதமருக்கு நன்றி சொல்லி இருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?
அத்தனை அரசியல் கட்சிகளும் தமிழர்களுக்கு ஒப்பாரி வைக்க மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. சந்தோசப்பட கற்றுக்கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story