Top
undefined
Begin typing your search above and press return to search.

வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் தோற்றுப் போவோம் : ஆனால் அணு ஆயுதம் ஏந்தி இறுதி வரை போராடுவோம் !! இந்தியாவுக்கு இம்ரான்கான் மிரட்டல்!!

வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் தோற்றுப் போவோம் : ஆனால் அணு ஆயுதம் ஏந்தி இறுதி வரை போராடுவோம் !! இந்தியாவுக்கு இம்ரான்கான் மிரட்டல்!!

userBy : user

  |  16 Sep 2019 8:07 AM GMT

வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப்போக கூடும். ஆனால், அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்ற முறையில் கடும் பின்விளைவுகள் ஏற்படும் என பேட்டி ஒன்றில் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில் :


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை இந்திய அரசு நீக்கிய பின்னர் இனிமேல் டெல்லியிடம் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இல்லை என இம்ரான்கான் கூறினார் .


மேலும், பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்குமாறு சர்வதேச பொருளாதார நடவடிக்கை குழுவிடம் பரிந்துரைத்த இந்திய அரசு எங்கள் நாட்டை பொருளாதார ரீதியாக பேரழிவுக்குள்ளாக நினைக்கிறது.


இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தொடங்கினால் வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப்போக கூடும். ஆனால், அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்ற முறையில் அது அணு ஆயுதப் போரில்தான் போய் முடியும். இதனால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு  கடும் பின்விளைவுகள் ஏற்படும் என இம்ரான் கான் இந்தியாவை மறைமுகமாக மிரட்டியுள்ளார்.


பாகிஸ்தான் வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் தோற்றுப்போகக் கூடும். ஆனால் விடுதலைக்காக சாகும்வரை போரிடு அல்லது சரணடைந்து விடு என்ற நிலைப்பாடு நாட்டுக்கு வந்து விட்டால் பாகிஸ்தானியர்கள் சாகும்வரை போரிடுவார்கள் என்பது எனக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


https://www.republicworld.com/india-news/general-news/pakistan-could-lose-in-a-conventional-war-against-india-imran-khan

Next Story