Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு எப்போதும் தேவை !! முக்கிய தலைவர்கள் வாழ்த்து!!

பிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு எப்போதும் தேவை !! முக்கிய தலைவர்கள் வாழ்த்து!!

SG SuryahBy : SG Suryah

  |  17 Sep 2019 9:32 AM GMT


பிரதமர் மோடி இன்று(செப்.,17) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன. பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு: பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவரது தலைமையில், நாடு வளர்ச்சி பெறுகிறது. மோடி தலைமையிலான அரசில் எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்தியாவிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவர், நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.


மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் கூறுகையில், நமது பிரதமர், நாடுகளின் நட்புறவை பொறுத்தவரை இந்தியாவின் நிலையை கட்டியெழுப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் முக்கிய பங்காக இருக்கிறார். "அவரது தொலைநோக்குத் தலைமை இந்தியாவுக்கு புதிய பெருமைகளை உயர்த்த உதவியுள்ளது. அவரது நல்ல ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் ”.


மத்திய ரயில்வேதுறை அமைச்சரான பியூஸ் கோயல் : பிரதமர் மோடி மிகப்பெரிய தலைவர். தீர்க்கமானவர். மோடி நம்க்கு மிகப்பெரிய முன்னோடி. நாம் அனைவரும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு பல விதங்களை கொண்டது. சிறு நகரத்திலிருந்து உலகின் தலைநகரங்களுக்கு, கட்சி உறுப்பினர்களிலிருந்து தேசிய தலைவர், கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறந்த நிர்வாகி, பூத் ஏஜெண்டாக இருந்து உலகின் சிறந்த தலைவர் என உருவெடுத்த பிரதமர் மோடியின் வாழ்க்கை பயணம் நமக்கு உத்வேகத்தை அளிக்ககூடியது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்ட வாழ்த்து செய்தி: ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் மோடி நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தமிழக முதல்வர் பழனிச்சாமி: பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டுக்கு சிறப்பாக சேவையாற்ற நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.


தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.
திமுக தலைவர் ஸ்டாலின், திமுக சார்பில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதுடன், இன்னும் பல ஆண்டுகள் பொது சேவை செய்ய வாழ்த்துகள்.


Next Story