Top
undefined
Begin typing your search above and press return to search.

“வீர சாவர்க்கர் முதல் பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் என்ற நாடே உருவாக்கி இருக்காது” !!

“வீர சாவர்க்கர் முதல் பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் என்ற நாடே உருவாக்கி இருக்காது” !!

SG SuryahBy : SG Suryah

  |  18 Sep 2019 1:03 PM GMT


“சாவர்க்கர்: மறந்துபோன கடந்த காலத்தின் எதிரொலி” என்ற புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். வீர சாவர்க்கர் சிறையில் 14 ஆண்டுகளை கழித்தார். அவரை போன்று வேண்டாம், வெறும் 14 நிமிடங்கள் நேரு சிறையில் இருந்திருந்தால்கூட, நாம் நேருவை ஒரு மாவீரர் என்று அழைக்கலாம்.


வீர சாவர்க்கர் மட்டும் நமது நாட்டின் முதல் பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கி இருக்காது.


வீரசாவர்க்கர் குறித்த இந்த புத்தகத்தை, காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவசியம் படிக்க வேண்டும். அவருக்கு இந்த புத்தகத்தை அனுப்பி வைக்க வேண்டும்.


இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.


Next Story