Top
undefined
Begin typing your search above and press return to search.

பாரிவேந்தர், ரவிக்குமார், கணேசமூர்த்தி, சின்ராஜ் ஆகியோரின் எம்.பி. பதவிக்கு ஆபத்து! உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் சிக்கல்!!

பாரிவேந்தர், ரவிக்குமார், கணேசமூர்த்தி, சின்ராஜ் ஆகியோரின் எம்.பி. பதவிக்கு ஆபத்து! உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் சிக்கல்!!

SG SuryahBy : SG Suryah

  |  18 Sep 2019 7:35 AM GMT



பாரிவேந்தர், ரவிக்குமார், கணேசமூர்தி், சின்ராஜ் ஆகியோரின் எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் இப்போது சிக்கலை சந்தித்து உள்ளனர். இவர்கள் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


அந்த மனுவில் அவர் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:-


பாராளுமன்ற தேர்தலின்போது, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற சில கட்சிகள், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், மதிமுகவை சேர்ந்த கணேசமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சின்ராஜ், ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பிக்களாகி உள்ளனர்.


இந்திய தேர்தல் கழிஷனின், தேர்தல் நடத்தை விதிகளின்படி, ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது. அவ்வாறு போட்டியிடுவது சட்டவிரோதமானது. ஒரு கட்சியில் பொறுப்பு வகித்துக்கொண்டு மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடமில்லை.


எனவே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேற்கண்ட 4 எம்பிகளின் வெற்றியும் செல்லாது என அறிவிக்க வேண்டும்.


இவ்வாறு அந்த மனுவில் எம்.எல்.ரவி. குறிப்பிட்டு இருந்தார்.


இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:-


ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை, அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மீறிய செயல் ஆகாதா?. தேர்தலில்போது, கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையைவிட, சின்னம்தானே முக்கியமாக உள்ளது.


சின்னத்தை பார்த்துதானே மக்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெறுவதோ அல்லது தோல்வி அடைவதோ முக்கியமல்ல. ஆனால் அவர்கள் எப்படி போட்டியிடுகிறார்கள் என்பதுதே முக்கியம்.


இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டனர்.


இதற்கு பதில் அளித்த தேர்தல் கமிஷன் வக்கீல் நிரஞ்சன், “ஒரு கட்சியைச் சேர்ந்தவர், மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என்று தேர்தல் விதிகளில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.


இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், வெற்றிபெற்ற இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், மதிமுகவை சேர்ந்த கணேசமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சின்ராஜ் ஆகிய 4 எம்பிகளுக்கும் வருகிற நவம்பர் 12-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


இதனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கணேசமூர்த்தி, ரவிக்குமார், சேர்ந்த சின்ராஜ், பாரிவேந்தர் ஆகியோரின் எம்பி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.


இவர்கள் 4 பேரும், தங்களின் கட்சியின் சார்பில் போட்டியிடாமல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது உலகம் அறிந்த ரகசியம். திமுகவில் உறுப்பினர்கள் என்று பித்தலாட்டமான ஆதாரங்களை சமர்பித்தாலும், அவர்கள் அனைவருமே தங்களின் கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இன்னமும் நீடிக்கின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மை.


எனவே இந்த வழக்கு விரைவாக விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கும் பட்சத்தில் 4 பேரின் எம்பி பதவிகளும் பறிபோவது தவிர்க்க முடியாதது.


இதேபோல், அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தமிமும் அன்சாரி, தனியரசு போன்றவர்களின் எம்எல்ஏ பதவிகளுக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு ஏற்படும்.


இந்த வழக்கின் தீர்பானது, அரசியலில் சீர்த்திருங்களை மேற்கொள்ள வழிவகுக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.



Next Story