Top
undefined
Begin typing your search above and press return to search.

மத மாற்ற மோசடிகளுக்கு இனி இந்தியாவில் வழியில்லை - வெளிநாட்டு நிதியை பெறும் தொண்டு நிறுவனங்களுக்கு கிடுக்குபிடி - கருவறுக்கப்படும் தேசவிரோத நடவடிக்கை!

மத மாற்ற மோசடிகளுக்கு இனி இந்தியாவில்  வழியில்லை - வெளிநாட்டு நிதியை பெறும் தொண்டு நிறுவனங்களுக்கு கிடுக்குபிடி - கருவறுக்கப்படும் தேசவிரோத நடவடிக்கை!

SG SuryahBy : SG Suryah

  |  18 Sep 2019 4:12 AM GMT


அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான விதிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


இந்தியா முழுவதும், ஆயிரக்கணக்கான, அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதியை பெற்று மோசடி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிதியை கொண்டு மத மாற்றத்தில் ஈடுபடுவது, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


அதன்படி, தொண்டுநிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், தங்கள் மீது, மத மாற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் எதுவும் இல்லை என்பதையும், மத மாற்றத்தில் ஈடுபட்டதற்காக தண்டனை எதுவும் பெறவில்லை என்பதையும், உறுதி செய்தால் மட்டுமே மேற்கொண்டு பணியாற்ற முடியும்.


இது தொடர்பாக வெளியான அறிவிப்பு:



  • வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை )விதிகள் 2011இல் மாற்றங்களை அறிவித்தது. இதில் தனிநபர்கள் பரிசுகள் ரூ.1 லட்சம் வரை என இருந்தால் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு முன்னதாக பரிசு பொருளின் மதிப்பு ரூ. 25,000 ஆக இருந்தால் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
  • தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் “அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய செயல்பாட்டாளர்கள், உறுப்பினர்கள்” ஒரு மத நம்பிக்கையிலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றியதற்காக. “வழக்கு தொடரப்படவோ அல்லது தண்டிக்கபடவோ இல்லை” என்பது குறித்து கட்டாயமாக சான்று வழங்க வேண்டும்.
  • இதற்கு முன்னதாக வெளிநாட்டு நிதி பெற அனுமதி கோரும் இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரி மட்டுமே அத்தகைய அறிவிப்பை வெளியிட வேண்டியிருந்தது.
  • மேலும் தற்போது விண்ணப்பதாரர் மட்டுமல்ல, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் வெளிநாட்டு நிதிகளை ‘திசை திருப்பவோ', ‘தேசசத்துரோகம்' அல்லது ‘வன்முறைககளை ஆதரிப்பதில் ஈடுபடவில்லை' என்று உறுதியளிக்க வேண்டும்.
  • வெளிநாட்டுக்கு செல்லும் நேரத்தில் ஏதேனும் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் அரசுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் தெரிவிக்க வேண்டுமென புதிய விதிகள் தெளிவு படுத்துகின்றன.
  • உறுப்பினரின் நிதி ஆதாரம், இந்திய ரூபாயில் தோராயமான மதிப்பு, நோக்கம் மற்றும் பணம் பயன்படுத்தப்பட்ட விதம் போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும். இதற்கு முன் இந்த விவரங்களை இரண்டு மாதங்களுக்குள் கொடுக்க வேண்டும்.

Next Story