Top
undefined
Begin typing your search above and press return to search.

#ஓசி பஜ்ஜி, #ஓசி பிரியாணி வரிசையில் #கலப்பட தி.மு.க : திருப்பூரில் மக்கள் உயிரோடு விளையாடிய தி.மு.க. நிர்வாகி - ஆய்வின் முடிவில் அம்பலமான குட்டு!

#ஓசி பஜ்ஜி, #ஓசி பிரியாணி வரிசையில் #கலப்பட தி.மு.க : திருப்பூரில் மக்கள் உயிரோடு விளையாடிய தி.மு.க. நிர்வாகி - ஆய்வின் முடிவில் அம்பலமான குட்டு!

SG SuryahBy : SG Suryah

  |  18 Sep 2019 5:00 AM GMT


அவிநாசியில் தி.மு.க. நிர்வாகிக்கு சொந்தமான குடோன் மற்றும் வீட்டிலிருந்து 1 டன் எடையுள்ள கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாமஸ்புரத்தில் வசிப்பவர் சுப்ரமணியம். இவர் தி.மு.க. வார்டு பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார். டீத்தூள் விற்பனை செய்து வருகிறார். இவர் 'கலப்பட டீத்தூள் விற்பனை செய்வதாக சமீபத்தில் புகார் எழுந்தது.


இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்ரமணியத்தின் வீடு, குடோனில் சோதனை நடத்தினர்.


சோதனையின் முடிவில் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த அதிகாரிகள், தேயிலை தொழிற்சாலைகளில் இருந்து தூள் வாங்கி உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெறாமல் அவற்றை பாக்கெட் செய்து சில்லரை விலையில் விற்பனை செய்து வருகிறார்.


இவர் விற்பனை செய்யும் தேயிலை துாளை குளிர்ந்த நீரில் பரிசோதிக்கும் போது அதில் சாயம் கலந்திருப்பது தெரிந்தது. மேலும் பல்வேறு பெயரில் போலியாக டீ தூள் பாக்கெட்டை உருவாக்கி உள்ளார்.


சுப்ரமணியத்தின் குடோனில் இருந்து  ரசாயன பொருளையும் கைப்பற்றி உள்ளோம். டீ தூள் மாதிரி ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அறிக்கை வந்த பின் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.


Next Story