Top
undefined
Begin typing your search above and press return to search.

100 நாடுகளுக்கு இராணுவ புல்லட் ஜாக்கெட் ஏற்றுமதி! 5 ஆண்டுகளில் தரமான ஏற்றுமதி நாடாக மாறிய இந்தியா!!

100 நாடுகளுக்கு இராணுவ புல்லட் ஜாக்கெட் ஏற்றுமதி! 5 ஆண்டுகளில் தரமான ஏற்றுமதி நாடாக  மாறிய இந்தியா!!

SG SuryahBy : SG Suryah

  |  19 Sep 2019 7:46 AM GMT


அகில இந்திய வானொலியின் செய்தி அறிக்கை ஒன்று பின்வருமாறு கூறுகிறது: “இந்தியா தனது சொந்த தயாரிப்பு மற்றும் தரத்தின்படி குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை ஐரோப்பிய நாடுகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. 360 டிகிரி பாதுகாப்பை வழங்கும் குண்டு துளைக்காத இந்த ஜாக்கெட்டுகளின் தரம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் அந்த நாடுகளின் அரசால் தயாரிக்கப்படும் ஜாக்கெட்டுகளின் தரத்துக்கு இணையானதென்றும், இதன் மூலம் தம் ராணுவத்தேவை போக வெளிநாடுகளுக்கு ஜாக்கெட்டுகளை ஏற்றுமதி செய்வதில் தேசிய தரத்தை பெற்ற நான்காவது நாடு இந்தியா.’’ எனவும் அந்த அறிக்கை கூறியது.


கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் என்னதான் மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்பதற்கு இந்த விஷயம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். தங்களுக்கு தரமான குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வேண்டும் என்பது இந்திய இராணுவத்தின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால் இந்த கோரிக்கையைக் கூட யுபிஏ அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாத ஒரு காலம் இருந்தது என்பதை அறியும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த விஷயங்கள் எவ்வாறு வெளிவந்தன என்பதைப் பார்த்தோமானால் சென்ற யுபிஏ அரசாங்கத்தின் செயல்பாடுகளை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா என நமக்கு தோன்றும்.


2009 –ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசு நடந்த போது இந்திய இராணுவம் தனது வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் தேவை எனபட்டியல் அளித்தது.. ஆனால் அடுத்த அடுத்த 5 ஆண்டுகளில் யுபிஏ அரசாங்கத்தால் அதாவது 2014 ஆம் ஆண்டு வரை இதைப் பற்றி உறுதியான எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அவர்கள் வீரர்களின் அவசியத் தேவையை புறக்கணித்தார்கள் .


இந்த நிலையில் மோடி தலைமையில் என்.டி.ஏ அரசு பொறுப்பேற்றதும் சென்ற 2018 – ஆம் ஆண்டில் ஆயுதப்படைகளின் போர் திறன்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை என்டிஏ அரசு அங்கீகரித்தது. மேலும், அவர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.


2019 - என்.டி.ஏ அரசாங்கம் இந்திய இராணுவத்திற்கு இவற்றை வழங்கியது மட்டுமல்லாமல், சர்வதேச தரப்படி குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை இந்தியா உற்பத்தி செய்வதை உறுதிசெய்தது, இது இந்தியாவை ஏற்றுமதியாளராக மாற்ற வழி வகுத்தது.


தி எகனாமிக் டைம்ஸில் வெளியிடப்பட்ட மேற்கண்ட அறிக்கையின்படி, இந்திய பொருள்கள் தரநிலை பணியக (பிஐஎஸ்) அதிகாரி பின்வருமாறு கூறியுள்ளார்.

குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் BIS தரத்தின்படி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு நமது இராணுவத் தேவைகளுக்கு வாங்கப்படுவது மட்டுமல்லாமல் மற்ற 100 நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன என்பதை நான் புரிந்துகொள்கிறேன்


டிசம்பர் 2018 இல், பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் நிட்டி ஆயோக் ஆகியோரின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து குண்டு துளைக்காத ஜாக்கெட்டுக்கான தேசிய தரத்தை BIS வடிவமைத்தது. குண்டு துளைக்காத ஜாக்கெட்டின் தரநிலை டிசம்பர் 2018 இல் வெளியிடப்பட்டது, இப்போது எல்லோரும் அதை செயல்படுத்துகின்றனர்.


மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், எங்களிடம் உலகத்தரம் வாய்ந்த அடிப்படை வசதி மற்றும் வடிவமைப்பு திறன்கள் உள்ளன. இந்த ஜாக்கெட்டுகளை ஐரோப்பிய நாடுகள் உள்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். ”


நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கருவிகளின் உற்பத்தியில் நமது நாட்டிலேயே ஒரு உற்பத்தி மையத்தை தொடங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்போது, எப்போதும் ஒரு வழி இருக்கிறது. நாட்டில் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை தயாரிப்பதற்காக உள்நாட்டில் மூலப்பொருட்களை உற்பத்தி செய்ய 4-5 வெளி நாடுகள் காட்டிய ஆர்வம் குறித்து நிட்டி ஆயோக் உறுப்பினரும் முன்னாள் டிஆர்டிஓ தலைவருமான வி கே சரஸ்வத் வெளிப்படையாக பொது மக்களுக்கு தெரிவித்திருந்தார்.


மேலும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளின் உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் திட்டத்தை கொண்டு வருமாறு பிரதம மந்திரி அலுவலகம் (பி.எம்.ஓ) அரசாங்கத்தின் சிந்தனைக் குழுவான நிதி ஆயோக்கிற்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

பாபா கவாச் – இதுதான் இந்தியாவின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத ஜாக்கெட்


இந்தியாவின் முதல் லேசான எடை கொண்ட மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத ஜாக்கெட் டெல்லியில் நடந்த சர்வதேச போலீஸ் எக்ஸ்போ 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்த ஜாக்கெட்டை ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலைகள் வாரியம் மற்றும் பொதுத்துறை உலோகங்கள் மற்றும் உலோக உலோகக் கலவைகள் உற்பத்தியாளரான மதானி இணைந்து உருவாக்கியுள்ளது. பாபா கவாச் பாபா அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து பெறப்பட்ட நானோ தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது, இதனால் இதற்கு இந்த பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


குண்டு துளைக்காத ஜாக்கெட் 9.2 கிலோகிராம் எடையுடையது மற்றும் ஏ.கே .47 தாக்குதல் துப்பாக்கிகளிலிருந்து 7.62 மிமீ கடின எஃகு கோர் தோட்டாக்களையும், இன்சாஸ் துப்பாக்கியிலிருந்து 5.56 மிமீ புல்லட்டையும் இந்த ஜாக்கெட்டால் தடுக்க முடியும்.


இவ்வாறு, 2009 முதல் 2019 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளைப் பொருத்தவரை இந்தியா நீண்ட தூரம் கடந்து வந்து இந்த சாதனையை படைத்துள்ளது. தொடக்கத்தில் இந்தியாவின் சொந்த இராணுவத்திற்கே கிடைக்காமல் இருந்த ஜாக்கெட்டுகள் இன்று இந்தியாவிலேயே உலகத்தரத்தில் ஏற்றுமதியாளராக மாறும் அளவுக்கு மாறியுள்ளது என்றால் அதற்கு என்ன காரணம் ?.

இந்தியாவின் சொந்த இராணுவ-தொழில்துறை வளாகத்தை வளர்ப்பதன் பின்னணியில் உள்ள வலுவான அரசியல் விருப்பத்தை இது காட்டுகிறது சுருக்கமாக சொல்லப்போனால் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய யுபிஏ அரசை ஆட்டிப்படைத்த சக்திகளுக்கு இந்திய இராணுவத்தை வலுப்படுத்துவதில் அக்கறை இல்லை. மற்ற வல்லரசுகளுக்கு இணையான பலத்தை நம் இராணுவம் பெற்றுவிடக்கூடாது என்பதில் அவை கண்ணும் கருத்துமாக இருந்தன. ஆனால் இன்றைய மோடி தலைமையிலான என்டிஏ அரசு இந்த மண்ணின் மைந்தர்கள் அரசு என்பதுதான் இந்த மாற்றங்களுக்குக் காரணங்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். பிரதமர் மோடி அரசின் இந்த அறிய சாதனையை, திறனை இன்று ஒவ்வொரு இராணுவ வீரனும் உணர்கிறான். விஷயம் தெரிந்தவர்கள் பலரும் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகிறார்கள்.
https://www.thetruepicture.org/bulletproof-jackets-india-modi/

Next Story