Top
undefined
Begin typing your search above and press return to search.

ஸ்டாலின் கண்களில் மரண பயத்தை காட்டிய கவர்னர்! என்னதான் நடந்தது? உலா வரும் “புதுப்புது” தகவல்கள்!!

ஸ்டாலின் கண்களில் மரண பயத்தை காட்டிய கவர்னர்! என்னதான் நடந்தது? உலா வரும் “புதுப்புது” தகவல்கள்!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  20 Sep 2019 11:09 AM GMT


இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்போகிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக அறிவித்தார்.


அதன்பிறகு திடீரென கவர்னர் அழைத்தார். உடனே கவர்னர் மாளிகைக்கு ஓடினார். உடன் டி.ஆர்.பாலு, துரைமுருகன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்றனர்.


பின்னர் வெளியே வந்த ஸ்டாலின் முகத்தில் மரண பயம் தெரிந்தது. கனிமொழி முகம் தொங்கிப்போனது. டி.ஆர்.பாலு முகத்தில் செத்த வீட்டு துக்கம் அப்பி இருந்தது. வழக்கமாக கேலி, கிண்டலுக்கு பெயர்போன துரைமுருகன் முகத்தில் மரண பீதி.


அப்படி கவர்னர் என்னதான் சொன்னார்? என்பது சத்தியமாக நமக்குத் தெரியாது. ஆனால் அதுபற்றி பல்வேறு செய்திகள், சமூக வலைத்தளங்களில் ரெக்கை கட்டி பறந்து வருகின்றன. அவைகளின் தொகுப்பு உங்களுக்காக:-


கவர்னர் தங்களை சந்திக்க வந்த மூவர் அணியிடம் மூன்றே மூன்று வரிகள் மட்டுமே பேசினார் என்று தெரிகிறது!


ஒன்று, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழகத்தில் ஏற்படும் அரசு சொத்து இழப்புகள் திமுகவின் தலைவரிடம் கடுமையாக வசூலிக்கப்படும்.


இரண்டாவது; இந்த போராட்டத்தில் வன்முறைகள் ஏற்பட்டு உயிர்ப்பலி ஏதாவது நிகழ்ந்தால், அதில் திமுக நிர்வாகிகள், முதல் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவார்கள்.


மூன்றாவது, மத்திய பாதுகாப்பு தலைமைகள் கேட்டுக்கொண்டால் திமுகவின் முன்னனி தலைவர்கள், காஷ்மீரில் அப்துல்லாவை கைது செய்தது போல், அதே “பொது பாதுகாப்பு சட்டத்தில்” கைது செய்யப்படுவார்கள் (இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை ஜெயில்தான். எந்த நீதிமன்றத்தாலும் தலையிடமுடியாது)


இந்த மூன்றையும் கூறிவிட்டு கவர்னர் கைகுலுக்கி விடைபெற்று உள்ளே சென்று விட்டார் என கூறப்படுகிறது.


திமுகவின் தலைவர்கள், குளிருட்டப்பட்ட அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவர்கள் முகங்களை பார்த்தவர்கள், இது உண்மையான தகவலாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.


இந்த செய்தி நம்புகிற மாதிரிதான் இருக்கிறது. இருந்தாலும் அடுத்த செய்தியை பார்க்கலாம்.


கவர்னரை சந்தித்த தி.மு.கவினரிடம் 23 தனித்தனி கோப்புகள் காண்பிக்கப் பட்டனவாம்.


1. முரசொலி அறக்கட்டளை குறித்த 3 கோப்புகள். தனியார் அறக்கட்டளை அனைத்தும் அரசுடமையாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


2. தி.மு.கவின் மாவட்ட அலுவலகங்கள், 16 நபர்கள் கொலைகள் மற்றும் தி.க மற்றும் தி.மு.கவினரின் தீவிரவாதிகளுடனான தொடர்புகள் குறித்த 6 கோப்புகள்.


3. கலைஞர் டி.வி குறித்த 2 கோப்புகள்.


4. மு.க.அழகிரியின் கடிதம் அடங்கிய குடும்ப சொத்து குறித்த 2 கோப்புகள்.


5. கனிமொழி குடும்ப வியாபார - தொழில் தொடர்பான 2 கோப்புகள்.


6. துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்ஷகன் உள்ளிட்ட 1321 பேரின் 1967-2017 வரையான 50 ஆண்டு சொத்து வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்த 3 தொடர் கோப்புகள்.


7. தயாநிதி - கலாநிதி வழக்கு, சன் டிவி தடை உட்பட கருணாநிதியின் சகோதரிகள் குடும்பத்தினர் சொத்து விவரம் அடங்கிய 3 கோப்புகள்.


8. ஸ்டாலின் மருமகன் சபரீசன் திருவிளையாடல் குறித்த 2 கோப்புகள்.


மேலும் சில தஸ்தாவேஜ்கள்.


இவற்றை முதலில் படித்துப் பார்த்தனராம். எள்ளளவுகூட தவறான குறிப்புகள் இல்லையாம். இருவர் முகமும் இருண்டு விட்டதாம். பின்னர் தஸ்தாவேஜ்கள் அனைத்தும் ஆளுனர் தனி அறைக்கு கொண்டு செல்லப் பட்டனவாம்.


கவர்னரின் பார்வையாளர் அறையில் தி.மு.கவினர் மட்டும் சிறிது நேரம் தனித்து விடப்பட்டனராம். அப்போது கண்களில் மரணபயத்துடன் ஸ்டாலினிடம், “இனி எல்லாம் அவ்வளவுதான்”, இங்கு எதுவும் பேசிக் கொள்ள வேண்டாம், நம்மைச் சுற்றி காமிராகள் உள்ளன என்றாராம்.


மீண்டும் புன்னகையுடன் பார்வையாளர் அறைக்கு வந்த கவர்னர், “சரி சென்று வாருங்கள்” என்றாராம். அப்போது வேண்டுமென்றே “மோடியையும், அமித்ஷாவையும் சமாதானப்படுத்த முடியாது” என்று ஹிந்தியில் கூறி அனுப்பி வைத்தாராம்.


வெளியில் வந்ததும் போராட்டம் ஒத்திவைப்பாம்.


இனி தினம் தினம் போராட்டம்தான். யாருக்கு?


ஆங்... யாருக்கோ!.


இது, அப்பட்டமாக, அப்படியே நம்புகிற மாதியேதான் உள்ளது. நக்கீரன், ஜூனியர் விகடனில் வெளியாகும் செய்திகள் போலவே உள்ளது.


இன்னும் ஒன்று மிச்சம் இருக்கு, அதையும் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.


செப்டம்பர் 20-ஆம் நாளில் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்துவது, "அமித்ஷா"விற்கு நேரடியாக எதிரானது எனக் கருதுவதால், கவர்னர் மூலம் ஸ்டாலினைக் கூப்பிட்டு, "தனியாக மிரட்டி" விட்டார்கள் எனவும் கூறுகிறார்கள்;.


உண்மைதானோ.?


அரசியல் ரீதியாக அமித்ஷா "இந்தி எதிர்ப்பை" எதிர்கொள்வதாக இருந்தால், உள்துறை அமைச்சர் ஒரு தன்னிலை விளக்க அறிக்கையைக் கொடுத்துவிட்டு, மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலுவையோ, நாடாளுமன்ற குழு ஒன்றின் தலைவர் கனிமொழியையோ, அழைத்து "ஸ்டாலினிடம் பேசி, போராட்டத்தை வாபஸ் வாங்கச் சொல்லுங்கள்" என்று கூறியிருக்கலாமே?


எதற்காக, கவர்னர் புரோஹித் மூலம் அழைத்து, "தனியாக மிரட்டி" வாபஸ் வாங்கச் செய்திருக்க வேண்டும்? கவர்னரும், ஸ்டாலினுடன் சென்ற துரைமுருகன், பாலு, கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரை சேர்த்தே நேரில் சந்தித்து பேசி இருக்கலாமே? எதற்கு "ஸ்டாலினை மட்டுமே தனியாக" பார்க்க வேண்டும்?


இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புகிறார்கள்.


கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்து ஊடகத்தார்களை சந்திக்கும்போது, "ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன், டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி" யாருடைய முகத்திலும் "ஈ ஆடவில்லையே ஏன்?" மிரட்சியான மூஞ்சியை வைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? என்றும் கேட்கிறார்கள்.


இதுவும் நம்புகிற மாதிரியேதான் இருக்கு.


இதற்கிடையே மீம்ஸ் கிரியேட்டர்களின் கை வண்ணத்தில் உருவான கவர்னர் 2.0 ஒன்று வைரலாகி வருகிறது. அதையும் பாருங்கள்.
https://www.facebook.com/chinnappaganesan/videos/10214936112418203/


இதற்கு மேல் குழப்புவதற்கு ஒன்றும் இல்லை என்பதால், இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம்.


நன்றி! வணக்கம்!


Next Story