Kathir News
Begin typing your search above and press return to search.

நிர்மலா சீதா ராமனின் பொருளாதார சலுகைகள் அறிவிப்பு: பங்குகள் மதிப்பு ஒரே நாளில் ரூ.1.40 லட்சம் கோடியில் இருந்து, ரூ.2.11 லட்சம் கோடியாக உயர்வு !!

நிர்மலா சீதா ராமனின் பொருளாதார சலுகைகள் அறிவிப்பு: பங்குகள் மதிப்பு ஒரே நாளில் ரூ.1.40 லட்சம் கோடியில் இருந்து, ரூ.2.11 லட்சம் கோடியாக உயர்வு !!

நிர்மலா சீதா ராமனின் பொருளாதார சலுகைகள் அறிவிப்பு: பங்குகள் மதிப்பு ஒரே நாளில் ரூ.1.40 லட்சம் கோடியில் இருந்து, ரூ.2.11 லட்சம் கோடியாக உயர்வு !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Sep 2019 12:57 PM GMT


நாட்டின் பொருளாதாரத்தை மந்த நிலையிலிருந்து ஊக்கப்படுத்த, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு வரிச்சலுகைகளை நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1,921 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிவுக்கு வந்தது.


இந்த உயர்வு 10 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு சரியான ஏற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்த உயர்வால் முதலீட்டாளர்கள் செய்த பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் ரூ.2.11லட்சம் கோடி உயர்ந்தது. ஏறக்குறைய சுமார் ரூ 7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.


ஆட்டமொபைல் துறையில் விற்பனைக் குறைவு, சில துறைகளில் உற்பத்தி சரிவால் பொருளாதாரம் சுணக்க நிலையில் உள்ளது . இந்த நிலையில் வளர்ச்சியை தூண்டிவிடும் நோக்கத்தில் கடந்த வாரம் 3 முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


இந்நிலையில் நேற்று 4-வது கட்ட அறிவிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக பல்வேறு வரிச்சலுகைகளை நிதியமைச்சர் அறிவித்தார். கார்ப்பரேட் வரி குறைப்பு, புதிய நிறுவனங்களுக்கான வரி குறைப்பு, உற்பத்தி நிறுவனங்களுக்கு வரி லுகை போன்ற சலுகைகளை நிர்மலா அறிவிப்பு செய்தார்.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவற்றை அறிவித்த சில நிமிடங்களில் பங்குச்சந்தையில் பங்குகள் விலை உயரத் தொடங்கியது.


சந்தையில் பட்டியல் செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ரூ.1.40 லட்சம் கோடியில் இருந்து, ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரித்தது.


மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் வர்த்தகத்தின் இடையே மிக அதிகமாக 1300 புள்ளி வரை உயர்ந்தது. வர்த்தகப் புள்ளிகள் வர்த்தகத்தின் இடையே 38,378 வரை அதிகபட்சமாக சென்றது. இந்த உயர்வு சென்ற 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இருந்தது.


வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் குறியீடு 1,921.15 புள்ளிகள் வரை உயர்ந்து, 38,014 புள்ளியில் முடிந்தது. வர்த்தகத்தின் போது இடையே சென்செக்ஸ் 2,122 புள்ளிகள் வரை உயர்வு பெற்றது. தேசியப் பங்குச் சந்தையில் நிப்டி 569.40 புள்ளிகள் உயர்ந்து 11,274.20 புள்ளிகளில் முடிந்தது.


http://business/516552-sensex-zooms-1-921-pts-on-fm-s-tax-booster-auto-bank-stocks-soar.html


Next Story
கதிர் தொகுப்பு
Trending News