Top
undefined
Begin typing your search above and press return to search.

மோட்டார் தொழிலின் எதிர்காலம் குறித்து நிர்மலா சீத்தாராமனின் கருத்து 100 சதவீதம் சரியானது !! மாருதி நிறுவன தலைவர் பார்கவா நீண்ட விளக்கம்!!

மோட்டார் தொழிலின் எதிர்காலம் குறித்து நிர்மலா சீத்தாராமனின் கருத்து 100 சதவீதம் சரியானது !! மாருதி நிறுவன தலைவர் பார்கவா நீண்ட விளக்கம்!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  20 Sep 2019 6:18 AM GMT


இந்திய ஆட்டோமொபைல் துறையின் மூத்த நிர்வாகியும் மாருதி நிறுவன தலைமை நிர்வாகியாகியுமான ஆர்.சி.பார்கவா ஷேர் வாகனங்களின் மீது இந்தியாவில் தற்போது பெருகி வரும் ஆர்வம் மற்றும் முன்னுரிமை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிக்கையை ஆதரித்து அவர் கூறியது சரிதான் என நிரூபித்துள்ளார்.


பிசினஸ் தினசரி லைவ்மின்ட்டுக்கு அளித்த பேட்டியில், ஷேர் வாகனங்களின் எழுச்சி மோட்டார் சவாரி வாகனங்களின் விற்பனையை பாதித்துள்ளதா என்று பார்கவாவிடம் கேட்கப்பட்டபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார், “இன்று, ஒரு இளைஞன் தனது பணத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதற்கு பல விதமான விருப்பங்கள் உள்ளன, அவர்களில் பலர் ஒரே விருப்பத்தில் தனது காசை கொட்டிவிடாமல் பல் வேறு வகையான விருப்பங்களை அனுபவிக்க விரும்புகிறார்கள். அதாவது ஒரு கார் வாங்குவதை விட, ஓலா மற்றும் உபெரில் இருந்து பெறப்படும் ஒரு வாகனம் மூலம் தனது சேவையை அதிகம் பெற முடியும், இது மிகவும் சிக்கனமானது என நினைக்கிறார்கள் . எனவே, நிதியமைச்சர் கூறியது 100% சரியானது. இன்றைய தலைமுறை அதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. ” என அழுத்தம் திருத்தமாக அவர் குறிப்பிட்டார்.


இளைய தலைமுறை கார்களை விட தங்களது ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக அனுபவிக்க உதவும் கேஜெட்களைத்தான் அதிகம் விரும்புகிறது என்றும் பார்கவா கூறினார். “இன்று, ஒரு இளைஞன் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறான், ஒரு உணவகத்தில் தனது நண்பர்களைச் சந்தித்து நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட விரும்புகிறான். ஆனால் அவன் ஒரு காரை வாங்கினால், இந்த விஷயங்களை எல்லாம் செய்ய முடியாது, ”என்று அவர் கூறினார்.


இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் புரட்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் ஆர்.சி.பர்கவா. அவரது தலைமையின் கீழ், மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனையாகும் மொத்த கார்களில் 50 சதவிகித சந்தையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சாதனைகளால் அவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவரையே நிறுவனத் தலைவராக நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்படி மாருதி தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு அனுபவ ரீதியாக சான்றுகள் உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் செல்போன்களின் விற்பனை ஆண்டுக்கு (YOY) 9.9 சதவீதமும், காலாண்டில் 14.8 சதவீதமும் (QoQ) அதிகரித்துள்ளது. பிரீமியம் பிரிவில், ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தின் சந்தை ஆதிக்க அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. ஆப்பிளின் ஒட்டுமொத்த பங்கு இப்போது 41.2 சதவீதமாக அதிகரித்து முன்னணியில் உள்ளது.


கடந்த வாரம், சென்னையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், “பிஎஸ் 6 மற்றும் ஆட்டோமொபைல் வாங்குவதில் ஈடுபடுவதை விட ஓலா மற்றும் உபேர் சவாரியை விரும்பும் மில்லினியல்களின் மனநிலையால் ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் தொழில் பாதிக்கப்பட்டிருக்கலாம் .” என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியதற்கு ட்விட்டர் போர்வீரர்கள், புதிதாக தொழிலில் இறங்கிய தொழில் வல்லுநர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அவரின் அறிக்கை குறித்து குறை கூறி பரபரப்பை ஏற்படுத்தின.


இஹு தொடர்பாக ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொரு ஆய்வும் மில்லினியல்கள் ஒரு காரை வாங்குவதை விட ஷேர் முறை சவாரிகளை அதிகம் விரும்புகின்றன, ஏனெனில் இது மிகவும் சிக்கனமானது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


உலகளாவிய வர்த்தக ஆலோசனை அமைப்பான டெலாய்ட், 2019 ஆண்டின் உலகளாவிய மோட்டார் வாகனங்கள் குறித்த நுகர்வோர் ஆய்வை ஜூன் மாதம் வெளியிட்டது. இந்த ஆய்வின்படி, இந்திய இளைஞர்களிடையே ஷேர் முறை வாகன சவாரி நம்பிக்கையைப் பெற்று வருகிறது. மோட்டார் வர்த்தக நிபுணர் மோர்கன் ஸ்டான்லியின் மற்றொரு அறிக்கை: பயணித்த மொத்த மைல்களில் ஷேர் முறை வாகன சவாரியின் பங்கு 2030 க்குள் 35 சதவீதத்தையும், 2040 க்குள் 50 சதவீதத்தையும் எட்டும் என்று கணித்துள்ளது.


ஆய்வுகள் படி, ஒரு ஷேர் காரில் பயணம் செய்வது வாடகை காரை விட மலிவானது. கார் உரிமையாளர் என்கிற சமூக நிலை கடந்த காலத்தின் ஒரு விஷயம் மற்றும் இளைஞர்கள் தற்போது புத்தி கூர்மையான விஷயங்களில் மற்றும் செயல்திறனில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால் “சமூக தடைகள் உடைந்து போகின்றன. மெர்சிடிஸில் இருந்து இறங்குவதைப் பற்றி யோசிக்க முடியாத எனது நண்பர்கள் ஓலா-உபெரை மகிழ்ச்சியுடன் அழைத்துச் செல்கிறார்கள், ”என்றார் பெங்களூரில் பணிபுரியும் 25 வயது அலுவலக ஊழியர்


நிர்மலா சீத்தாராமனின் அறிக்கையை விமர்சிப்பதற்கு முன், ட்விட்டர் மற்றும் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான சண்டையை பிடிப்பவர்கள் மேக்ரோ பொருளாதாரம் முதல் சமூக அறிவியல் வரையிலான எல்லாவற்றையும் பற்றியும், ஆய்வுகள், தொழில் வல்லுநர்களின் அறிக்கைகள் குறிப்பாக ஆனந்த் மஹிந்திரா, ஆர்.சி.பர்கவா போன்றவர்களின் கருத்துக்களை படிக்க வேண்டும் என பிரபல TFI POST ஆங்கில வர்த்தக இதழில் கட்டுரையாளர் அமித் அக்ரஹாரி ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
https://tfipost.com/2019/09/finance-minister-is-100-correct-maruti-chairman-vindicates-nirmala-sitharaman-on-ola-uber/

Next Story