Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்தின் பக்கம் திரும்பிய சி.பி.ஐ ! விழி பிதுங்கும் தி.மு.க ! இடைத்தேர்தல் வருமா !!

தமிழகத்தின் பக்கம் திரும்பிய சி.பி.ஐ ! விழி பிதுங்கும்  தி.மு.க ! இடைத்தேர்தல் வருமா !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 Sep 2019 3:35 AM GMT


முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். இந்நிலையில் சிவகங்கை எம்பி சிதம்பரத்தின் மகன் விரைவில் கைது செய்யப்படுவார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


2ஜி முறைகேடு வழக்கு மற்றும் மேக்சிஸ் வாழக்கை விசாரித்த நீதிபதி ஓபி சைனி விரைவில் ஒய்வு பெற இருப்பதால் அந்த வழக்குகளை சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி அஜய் குமார் தான்ப.சிதம்பரம் வழக்கை விசாரித்து வருகிறார் என்பதால் திமுக வட்டாரங்கள் சற்று கதிகலங்கி உள்ளது.





இதுமட்டுமில்லாமல் தி.மு.க வினர் மீது உள்ள கொலை வழக்குகளை மீண்டும் விசாரிக்க அ.தி.மு.க தலைமை மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிகிறது. சி.பி.ஐ வளையத்திற்குள் தி.முக இருப்பது தி.மு.க விற்கு மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


தமிழக எம்.பிகள் மீதுள்ள வழக்குகள் தூசு தட்டப்பட்டு விசாரணைக்கு வர இருக்கிறது. இதில் முக்கியமாக தி.மு.க எம்பிக்கள் மீது அதிக அளவில் வழக்குகள் உள்ளன. எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற பீதியில் உள்ளது தி.மு.க.





இந்நிலையில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் வாபஸ் பெற்றது என உளவு துறை தெரிவிக்கின்றன.பதவி இழக்க போகும் எம்.பிக்கள் லிஸ்டில் தற்போது மேலும் 4 எம்.பிகள் பெயர் இடம் பெற்றுள்ளது,


தி.மு.க எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீது நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிபிசிஐடி அலுவலகத்தில் வரும் 23 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற சிறு கட்சிகளின் 4 வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.4 பேரின் வெற்றியை எதிர்த்து வழக்கு பதியப்பட்டுள்ளது


வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது,செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம் எல் ரவி வழக்கு தொடர்ந்தார்


இந்த வழக்கை ஏற்று கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது தேர்தலில் வேட்பாளர்களை விட சின்னங்கள் தான் அதிக முக்கிய பங்கு வகிக்கின்றனர்.அவ்வாறு இருக்கும் போது ஒரு கட்சியின் உறுப்பினராக இல்லாத நபர் அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் மோசடி ஆகாதா?" என கேள்வி எழுப்பினர். மேலும் இவ்வழக்கு குறித்து தேர்தல் ஆணையம்,மற்றும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.


இதனால் இப்போதே இடைத்தேர்தல் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர் கட்சியின் தொண்டர்கள். இன்னும் ஒரு 6 மாதம் பொறுத்திருந்தால் போதும் தமிழகத்தில் திமுகவின் நிலைமை தெரியும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


திமுகவின் நிலைமை இவ்வாறு இருக்க உட்கட்சி பூசல் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.தலைவர் ஸ்டாலின் மீது பொன்முடி, நேரு, போன்றோர் கடும் அதிருப்தியில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


உதயநிதி அன்பில் மகேஷ் ஒரு அணியாக சேர்ந்து கொண்டு சீனியர்களை சீண்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலுவுக்கும் கனிமொழிக்கும் பனிப்போர் நடக்கிறது. என்னதான் செய்ய போகிறார் ஸ்டாலின் என ஆவலாய் காத்திருக்கின்றனர் உடன்பிறப்புக்கள்


தி.மு.க.வில் எப்போது எது வேண்டும் நடக்கலாம்!


Next Story