Top
undefined
Begin typing your search above and press return to search.

போப் ஆண்டவருக்குப் பிறகு பிரதமர் மோடி - அமெரிக்க வரலாற்றில் சரித்திரம் படைத்த முதல் இந்திய பிரதமர்!

போப் ஆண்டவருக்குப் பிறகு பிரதமர் மோடி - அமெரிக்க வரலாற்றில் சரித்திரம் படைத்த முதல் இந்திய பிரதமர்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  23 Sep 2019 4:06 AM GMT


அமெரிக்காவில், போப் ஆண்டவருக்குப் பிறகு எந்தவொரு தலைவரின் உரையையும் கேட்க இவ்வளவு மக்கள் கூடியதில்லை. வெளிநாட்டு அரசியல் தலைவருக்கு இந்த அளவுக்குக் கூட்டம் கூடியது இதுவே முதன்முறையாகும்.


அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், செப்டம்பர் 22-ம் தேதி (நேற்று) பிரதமர் மோடி 50,000 இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அங்குள்ள என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில், மாலை 6 மணிக்கு மோடி மேடையேறினார். இரவு 9 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் பங்கேற்று சிறப்பித்தார்.


கூட்டம் முடிந்தபிறகு, 10.30 மணிவரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில், 400 கலைஞர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி இந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு, பிரதமர் மோடி இரவே நியூயார்க் புறப்பட்டு சென்றார். அமெரிக்காவில், போப் ஆண்டவருக்குப் பிறகு எந்தவொரு தலைவரின் உரையையும் கேட்க இவ்வளவு மக்கள் கூடியதில்லை. வெளிநாட்டு அரசியல் தலைவருக்கு இந்த அளவுக்குக் கூட்டம் கூடுவது இதுவே முதன்முறையாகும்.


இடம் தேர்வு செய்வதிலும் இந்தியாவிற்கு சாதகம்:


இந்தியத் தலைவர்கள் இதற்கு முன் வாஷிங்டன், நியூயார்க், சான்பிரான்ஸிஸ்கோ போன்ற நகரங்களில் உரையாற்றியுள்ளனர். இந்த முறை மோடி ஹூஸ்டனைத் தேர்வுசெய்ததற்குக் காரணம் உள்ளது. இந்தியாவுடன் ஆண்டுக்கு ரூ.30,000 கோடி அளவுக்கு ஹூஸ்டன் நகரம் வர்த்தகத்தில் ஈடுபடுகிறது. ஹூஸ்டனில் உள்ள 28 நிறுவனங்கள், இந்தியாவில் 68 கிளைகளைப் பரப்பியுள்ளன. ஹூஸ்டனில் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதன் காரணமாகவே, ஹூஸ்டன் நகரை மோடி தேர்வு செய்துள்ளார்.


Next Story