Top
undefined
Begin typing your search above and press return to search.

“லவ் ஜிகாத்” - இன் கோர முகம்! கிறிஸ்தவ பெண்ணை கற்பழித்து, நிர்வாண படம் எடுத்து, மதம் மாற மிரட்டல்! களையெடுக்க அமித்ஷா அதிரடி உத்தரவு!!

“லவ் ஜிகாத்” - இன் கோர முகம்! கிறிஸ்தவ பெண்ணை கற்பழித்து, நிர்வாண படம் எடுத்து, மதம் மாற மிரட்டல்! களையெடுக்க அமித்ஷா அதிரடி உத்தரவு!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  24 Sep 2019 12:24 PM GMT



கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் 19 வயது கிறிஸ்தவ பெண்ணை காதலிப்பதாக நாடகம் நடத்தி, ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்து, அந்த காட்சியை படம்பிடித்தும், அவளை நிர்வாண கோலத்தில் போட்டோக்கள் எடுத்து, அந்த போட்டோக்களையும், வீடியோவையும் காட்டி மிரட்டி முஸ்லிமாக மதம் மாற்ற முயர்ச்சி செய்தது நாடு முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் அந்த பெண் படித்து வருகிறார். கல்லூ விடுதியில் தங்கி அவள் படித்து வருகிறாள். மேலும் அந்த பகுதியில் உள்ள கோச்சிங் சென்டருக்கும் சென்று படித்து வந்துள்ளார். கோச்சிங் சென்டருக்கு சென்றபோது, கோழிக்கோடு நடுவண்ணூர் பகுதியைச் சேர்ந்த பாசல் என்ற 21 முஸ்லிம், அவளுக்கு வலை விரித்துள்ளான்.


அவனது உள்நோக்கம் என்ன என்பது தெரியாமல், அவனுடன் பழகி வந்துள்ளாள் அவள். நாளடையில் அவன் மீது காதல் வயப்பட்டுள்ளாள்.


காதல் என்ற போர்வையில் அவளை அருகில் உள்ள லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளான் பாசல். பின்னர் ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவளை கற்பழித்துள்ளான். பின்னர் அதனை வீடியோ எடுத்துள்ளான். அதோடு அவளை நிர்வாண கோலத்தில் போட்டோக்களையும் எடுத்து வைத்துள்ளான்.


இதேபோல பலமுறை அவளை கற்பழித்துள்ளான். பின்ன மெதுவாக தனது லவ் ஜிகாத் வேலையை அரங்கேற்ற தொடங்கி உள்ளான்.





முதலில் அவளை முஸ்லிம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தி உள்ளான். அவள் கிறிஸ்தவ மதத்தில் இருந்து முஸ்லிமாக மதம் மாற சம்மதிக்கவில்லை. பல முறை அவன் வற்புறுத்தியும் அவள் சம்மதிக்காததால், அவனது சுயரூபத்தை காண்பிக்க தொடங்கியுள்ளான்.


ஏற்கனவே திட்டமிட்டு எடுத்து வைத்திருந்த அவளின் நிர்வாணப்படங்களையும், உடலுறவு வீடியோ காட்சிகளையும் அவளிடம் காட்டியுள்ளான். “நீ முஸ்லிமாக மதம் மாறாவிட்டால், நான் உனது நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன்” என்றும் மிரட்டி உள்ளான்.


இதை கேட்டவுடன் அவள் அதிர்ந்து போய் உள்ளாள். காதலில் மயங்கி, அவனது நடிப்பை உண்மை என்று நம்பி அவனுடன் சென்றதை அவளுக்கே தெரியமல் அவன் படம் பிடித்தும், அவளை நிர்வாண கோலத்தில் போட்டோ எடுத்தும் வைத்திப்பதைப் பார்ததும் அவள் நிலை குலைந்து போனாள்.


தொடக்கத்தில் இதெல்லாம் “லவ் ஜிகாத்” என்று அவளின் தோழிகள் சொன்னபோது, அவள் அதை நம்பவில்லை. இப்போது அனைத்தும் அவளுக்கு புரிந்து விட்டது.


இது பற்றி தன்னுடன் விடுதியில் தங்கியுள்ள தோழிகளிடம் கூறியுள்ளாள். அவர்கள் உடனே, இதை அவளது தந்தையிடம் தெரிவித்து, பெற்றோரின் அறிவுரைப்படி நடப்பதே இந்த விஷயத்தில் நல்லது என்று தீர்க்கமாக கூறியுள்ளனர்.


இதனைத்தொடர்ந்து, அவள் தனது தந்தையிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளாள். அவரும் நன்கு யோசித்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி புகார் கொடுத்தார்.


அவனுக்கு காவல் நிலையத்திலும் செல்வாக்கு இருந்ததால், அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனுக்கு பின்னணியில் சில முஸ்லிம் அமைப்புகள் இயங்கி வந்துள்ளது. அவர்களுக்கு பண பலமும், அதிகார பலமும், அரசியல் செல்வாக்கும் இருந்ததால் அவன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இதனால் அந்த பெண்ணின் தந்தை, அவர்களின் சர்ச் பாதிரியாரிடம் இந்த பிரச்சினையை கொண்டு சென்றுள்ளார். சர்ச் நிர்வாகம் நேரடியாக களத்தில் இறங்கி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதனைத் தொடந்து சம்பிரதாயத்திற்கு வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதோடு கடமை முடிந்ததென்று கிடப்பில் போட்டுவிட்டனர்.


காவல் துறையினரில் இழுத்தடிப்பை தொடர்ந்து இந்த பிரச்சினையை தேசிய சிறுபான்மை கமிஷன் துணைத் தலைவர் ஜார்ஜ் குரியனிடம் கொண்டு சென்றனர். அவர் இது தொடர்பாக அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார்.


பின்னர் இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு புகார் அனுப்பினார்.


அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-


“லவ் ஜிகாத்” மூலம் கிறிஸ்தவ இளம் பெண்களை காதல் என்ற போர்வையில் முஸ்லிமாக மதம் மாற்றி, ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லிம் பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விடுகின்றனர்.


தேசிய சிறுபான்மை கமிஷனுக்கு சமீபத்தில் இரு புகார்கள் வந்துள்ளன். அதில் ஒன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்துள்ளது. கிறிஸ்தவ கல்லூரி மாணவி ஒருவரை, ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்து அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர். அதன்பிறகு அவனை கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மதம் மாற்ற முயற்சித்துள்ளனர். மதம் மாறாவிட்டால், அவளது நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர். அவளை காரில் கடத்தி செல்லவும் முயற்சித்துள்ளனர்.


மற்றொரு சம்வவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லியில் படித்து வந்த மலயாளி கிறிஸ்தவ பெண்ணை முகமது சித்திக்கி என்பவன், மேற்காசிய நாட்டிற்கு கடத்தி சென்றுள்ளனர்.


கேரளாவில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 21 பேரில் 5 பேர் கிறிஸ்தவர்கள். அவர்களை முஸ்லிமாக மதம் மாற்றி முஸ்லிம் பயங்கரவாத அமைப்பில் சேர்த்துள்ளனர்.


கடந்த 2005 - ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை, காதல் என்ற போர்வையில் கேரளாவில் 4000 கிறிஸ்தவர்களை முஸ்லிமாக மதம் மாற்றியுள்ளனர். முஸ்லிமாக மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவ பெண்கள் செக்ஸ் கொடுமைகளை அனுபவித்து வருபவர்களாகவே உள்ளனர். அவர்களின் மீதி வாழ்க்கையை பீதியுடனே களித்து வருகின்றனர்.


கேரளாவில் மத ஒருமைப்பாட்டிற்கு வேட்டு வைக்கும் வகையில் முஸ்லிம்கள் லவ் ஜிகாத்தை அரங்கேற்றி வருகின்றனர்.


எனவே மத்திய உள்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு, மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ள “லவ் ஜிகாத்” விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தீவிர விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப் பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். தேசிய புலனாய்வு அமைப்பு (ஐ.என்.ஏ) மற்றும் மத்திய உளவு அமைப்பு (ஐபி) ஆகியன உடனே களத்தில் இறங்கின.


இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சினை வெளியுலகத்திற்கு நேற்று தெரிய வந்துள்ளது.


பாதிக்கப்பட்ட மாணவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவியை பலாத்காரம் செய்த பாசல் இதுவரை கைது செய்யப்படவில்லை.


ஆனால் அவன் இதுபோல் மேலும் பல இந்து, கிறிஸ்தவ பெண்களை கற்பழித்து முஸ்லிமாக கட்டாய மதமாற்றம் செய்திருக்கலாம் என்று உளவுத்துறை கருதுகிறது. அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறும்போது, “சரபுரம் பூங்காவில் வைத்து, லவ் ஜிகாத் கும்பல், எனது மகளுக்கு மயக்க மருந்தை ஜூசில் கலந்து கொடுத்து பின்னர் எனது மகளை நிர்வாணமாக படம் எடுத்துள்ளனர். எனது மகளை கிறிஸ்தவ மதத்தில் இருந்து முஸ்லிமாக மதம் மாற்ற மிரட்டி உள்ளனர். மதம் மாறாவிட்டால், நிர்வாண படத்தை ,இணையதம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளனர். ஏற்கனவே இதுபோல 50 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக காவல் துறை கமிஷனர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தேன். எங்களிடம் எல்லா ஆதாரங்களும் உள்ளன. இருந்தும்  அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பயங்கரவாத கும்பலுக்கு போலீசார் உதவியாக உள்ளனர். இதை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், இன்னும் ஏராளமானவர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்றார் வருத்தத்துடன்.


https://www.timesnownews.com/india/article/islamic-radicals-targeting-christian-girls-in-kerala-using-love-jihad-ncm-letter-to-home-minister-amit-shah/494143


Next Story