Top
undefined
Begin typing your search above and press return to search.

6 கோடி தொழிலாளர்களுக்கு இனிப்பான செய்தி: வருங்கால வைப்பு நிதிக்கு 8.65% வட்டி வழங்க மோடி அரசு உத்தரவு!!

6 கோடி தொழிலாளர்களுக்கு இனிப்பான செய்தி: வருங்கால வைப்பு நிதிக்கு 8.65% வட்டி வழங்க மோடி அரசு உத்தரவு!!

userBy : user

  |  25 Sep 2019 6:37 AM GMT


பணியாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளுக்கு (பிஎஃப்) 8.65 சதவீதம் வட்டி வழங்க மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் உத்தரவிட்டு அதற்கான அறிக்கை வெளியிட்டுள்ளது.


கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு 8.55 சதவீத வட்டித்தொகை வழங்கப்பட்டது. இந் நிலையில், 2018-19 நிதியாண்டில் 8.65 சதவீத வட்டி வழங்க வேண்டும் என சென்ற பிப்ரவரி மாதத்தில் முடிவெடுக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சகம் இந்த திட்டத்துக்கு கடந்த 19-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அதற்கான உத்தரவு பிறப்பித்து அறிக்கையை மத்திய பணியாளர் நல அமைச்சகம் நேற்று செவ்வாய் கிழமை வெளியிட்டது.


வருங்கால வைப்பு நிதிக்கு கூடுதல் வட்டி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் பயன் அடைய உள்ளனர். இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத் துறை விவகார மந்திரி சந்தோஷ் கங்வார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""பணியாளர்கள்  வருங்கால வைப்பு நிதிக்குக் கூடுதல் வட்டி வழங்குவதற்கான அறிக்கையை வெளியிடுவதில் இந்த அரசு மகிழ்ச்சி அடைகிறது. இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் பயனடைய உள்ளனர். இதனால், அரசுக்கு ரூ.54,000 கோடி செலவாகும்'' என்றாலும் இந்த சுமையை அரசு சுகமான சுமையாக மனதில் கொள்வதாக கூறியிருந்தார் . 


https://www.dinamani.com/india/2019/sep/25/865-interest-on-provident-fund-central-government-3241437.html


Next Story