Top
undefined
Begin typing your search above and press return to search.

கிருஷ்ணகிரி மலையில் பயங்கரவாதிகள் 10 நாள் பயிற்சி! உதவிய உள்ளூர் முஸ்லிம்களுக்கு என்ஐஏ வலை!!

கிருஷ்ணகிரி மலையில் பயங்கரவாதிகள் 10 நாள் பயிற்சி! உதவிய உள்ளூர் முஸ்லிம்களுக்கு என்ஐஏ வலை!!

userBy : user

  |  25 Sep 2019 11:49 AM GMT



கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள தொட்டபல்லாபூர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் என்ற தடை செய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் (28) என்பவனை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.


அவனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பெங்களூரு ராம் நகரை அடுத்த திப்பு நகரில் உள்ள கால்வாயில் இருந்து வெடிக்காத 2 வெடிகுண்டுகளை, கடந்த ஜூன் 26-ஆம் தேதி போலீசார் கண்டெடுத்தனர்.


இவன், மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவன். மேலும், இந்தியா மற்றும் வங்கதேச அரசுகளுக்கு எதிராக போர் தொடுக்க, “ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ்” என்ற அமைப்பு சதி செய்து வந்தது. அந்த அமைப்பில் ஹபீப் உர் ரஹ்மான் ஷேக், முக்கிய தளபதியாக இருந்துள்ளான்.


பயங்கரவாதி ஹபீப் உர் ரஹ்மான் ஷேக், “ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ்” என்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஜாஹித் உல் இஸ்லாம் என்ற கவுசரின் நெருங்கிய கூட்டாளி ஆவான்.
இதற்கிடையே ஹபீப் உர் ரஹ்மான் ஷேக், தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ண தேவராயர் மலையில் வெடி குண்டு தயாரிப்பது மற்று பரி சோதனை செய்வது போன்ற பயிற்சியில் ஈடுபட்டது என்ஐஏ அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.


இதனைத் தொடர்ந்து அவனை என்ஐஏ அதிகாரிகள் கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கிருஷ்ண தேவராயர் மலைக்கு விசாரணை நடத்தினர். பலமுறை இந்த விசாரணை நடந்துள்ளது.


இந்த தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


அவன், கிருஷ்ண தேவராயர் மலையில் 10 நாட்கள் தங்கி இருந்து வெடிகுண்டுகள் தயாரித்துள்ளான். மேலும் வெடிகுண்டுகளை பரிசோதனை செய்ததும் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இவனுடன் மேலும் பல முஸ்லிம் பயங்கரவாதிகள் 10 நாட்கள் தங்கி இருந்து பயிற்சி பெற்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


உள்ளூர் முஸ்லிம்களின் ஒத்துழைப்பு இல்லாமல் 10 நாட்கள் பலர் வந்து தங்கி இருந்து வெடிகுண்டு பரிசோதனை செய்வதும், பயிற்சிகள் எடுப்பதும் சாத்தியம் இல்லை. எனவே அந்த கோணத்திலும் என்ஐஏ அதிகாரிகளை விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.


விசாரணையின் முடிவில்தான், உள்ளூர் முஸ்லிம்கள், யார் யாருக்கு தொடர்பு இருந்துள்ளது என்பது அம்பலத்துக்கு வரும்.


Next Story