Kathir News
Begin typing your search above and press return to search.

“முத்தலாக்” மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.6,000 நிதி உதவி!!

“முத்தலாக்” மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.6,000 நிதி உதவி!!

“முத்தலாக்” மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.6,000 நிதி உதவி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Sep 2019 5:25 AM GMT



“முத்தலாக்” மூலம் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கப்பட்டு வந்ததற்கு, நரேந்திர மோடி அரசு முடிவு கட்டியுள்ளது. இதற்காக “முத்தலாக் தடை சட்டம்” கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் காட்டுமிராண்டி தனம் முடிவுக்கு வந்துள்ளது.
முத்தலாக் தடை சட்டம் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடைத்துள்ளது. அதோடு அவர்களின் உரிமையும் பாதுகாக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களின் குறை தீர்ப்பு கூட்டம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்தது.
இதில் 300-க்கும் அதிகமான முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து தெரிவித்து அதற்கு தீர்வு காணும்படி முறையிட்டனர்.
முஸ்லிம் பெண்களின் குறைகளை முதல்வர் யோகி ஆதித்தியநாத் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
முத்தலாக் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு, வக்பு வாரியத்தின் சொத்துக்களில், உரிமை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட படித்த முஸ்லிம் பெண்களுக்கு, கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும். மேலும் பல்வேறு அரசு நல திட்டங்களின் மூலம் அவர்களுக்கு வீட்டு வசதி, கல்வி உதவி தொகை போன்றவை வழங்கப்படும்.
முத்தலாக் மூலம் தங்களின் கணவனை பிரிந்த முஸ்லிம் பெண்களுக்கு சட்ட தீர்வு கிடைக்கும் வரை அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகையாக வழங்கப்படும். மேலும் வழக்கு செலவிற்காக உதவி தொகையும் வழங்கப்படும்.
இவ்வாறு யோகி ஆதித்தியநாத் கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News