Top
undefined
Begin typing your search above and press return to search.

மெக்காவைப் போல அயோத்தி இந்துக்களுக்கு புனிதமானது !! முஸ்லிம் தரப்பு கருத்தை மேற்கோள் காட்டிய சுப்ரீம் கோர்ட்!!

மெக்காவைப் போல அயோத்தி இந்துக்களுக்கு புனிதமானது !! முஸ்லிம் தரப்பு கருத்தை மேற்கோள் காட்டிய சுப்ரீம் கோர்ட்!!

userBy : user

  |  26 Sep 2019 5:06 AM GMT



மெக்காவைப் போல அயோத்தி இந்துக்களுக்கு புனிதமானது !! முஸ்லிம் தரப்பு கருத்தை மேற்கோள் காட்டிய சுப்ரீம் கோர்ட்


ராமர் கோவில் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்டில் நாள்தோறும் நடை பெற்று வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் உள்ளிட்ட அரசியல் சாசன அமர்வு இவ்வழக்கை விசாரித்துக் கொண்டு வருகிறது.


நேற்று நடை பெற்ற இந்த நீண்ட விசாரணையின் போது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்துக்களுக்கு அயோத்தி என்பது மெக்காவைப் போலவே புனிதமானது என்று முஸ்லிம்கள் கூட கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டது.


மேலும் சர்ச்சைக்குரிய வழக்கின் விசாரணை அயோத்தி விவகாரத்தில் நல்ல மத்தியஸ்தம் ஏற்பட்டு சரியான திசையில் செல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தது.


தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் மேற்கொண்ட நேற்றைய விசாரணையின் போது , முஸ்லீம் கட்சிகளுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானை விசாரித்த போது ஒரு கடவுள் சிலையின் தெய்வீகத்தன்மை மற்றும் அதன் வடிவம் ஆகிவை நீண்ட காலமாக மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை தொடர்பான விஷயம். இதை எல்லாம் கூட நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தக் கோருவது சரியானதா, இது ஒரு நீதி மன்றத்தின் சரியான ஆளுமை ஆகுமா எனவும் கேட்டார்


மேலும் ராமரின் பிறப்பிடம் தொடர்பாக இந்துக்களின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குவது கடினம். சில முஸ்லீம் சாட்சிகள் கூட முஸ்லிம்களுக்கு மெக்கா எவ்வாறு புனிதமான இடமாக திகழ்கிறதோ அதே போல இந்துக்களுக்கு அயோத்தியில் உள்ள இந்த சர்ச்சைக்குரிய இடம் புனிதமானது என்று திங்கள் கிழமை நடைபெற்ற விசாரணையின்போது  கூறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியது.


https://www.republicworld.com/india-news/law-and-order/even-muslims-say-ayodhya-to-hindus-is-like-mecca-to-them-sc.html




Next Story