Kathir News
Begin typing your search above and press return to search.

“என்ன கொடுமை சார் இது” தனது பிறந்தநாள் கேக்கை வெட்டுவதற்கு கூட மன்மோகன் சிங்கிற்கு சுதந்திரம் இல்லையா? வைரலானது வீடியோ!!

“என்ன கொடுமை சார் இது” தனது பிறந்தநாள் கேக்கை வெட்டுவதற்கு கூட மன்மோகன் சிங்கிற்கு சுதந்திரம் இல்லையா? வைரலானது வீடியோ!!

“என்ன கொடுமை சார் இது” தனது பிறந்தநாள் கேக்கை வெட்டுவதற்கு கூட மன்மோகன் சிங்கிற்கு சுதந்திரம் இல்லையா? வைரலானது வீடியோ!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Sep 2019 12:12 PM GMT



முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்ஜிக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் நீண்ட நாள் வாழ வேண்டுமென்று நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1176997633329651713


இதற்கிடையே மன்மோகன்சிங் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அதில், மன்மோகன் சிங் தனது பிறந்த நாள் கேக்கை வெட்ட முயற்சிக்கிறார். ஆனால் அவர் கேக் வெட்டுவதற்குள், அவரது கையில் இருந்து கத்தியை ராகுல் காந்தி பிடுங்கி அவரே கேக்கை வெட்டுகிறார். வழக்கம்போல மன்மோகன் சிங் ஒன்றுமே சொல்லாமல் மௌனமாக அமர்ந்திருக்கிறார். பின்னர் ராகுல் காந்தி வெட்டிய கேக்கின் ஒரு துண்டை எடுத்து அதனை ஒரு தட்டில் வைத்து, அதை மன்மோகன் சிங் முன் வைக்கிறார்.


இந்த வீடியோவை வெளியிட்டு, “மன்மோகன் சிங்கிற்கு அவரின் கேக்கை வெட்டுவதற்குகூட சுதந்திரம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.




https://twitter.com/rishibagree/status/1177099374238658560


இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News