Top
undefined
Begin typing your search above and press return to search.

மூன்று மெய்டன் ஓவர் மற்றும் மூன்று விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்த இந்தியா வீராங்கனை!!

மூன்று மெய்டன் ஓவர் மற்றும் மூன்று விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்த இந்தியா வீராங்கனை!!

userBy : user

  |  26 Sep 2019 7:34 AM GMT


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று ஓவர்களை மெய்டன் ஆகிய இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா சாதனைப் படைத்துள்ளார்.


இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் சூரத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் அடித்தனர்.


பின்னர் 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 19.5 ஓவரில் 119 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





இந்தியாவின் வெற்றிக்கு காரணமான ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மாவின் பந்து வீச்சுதான் முக்கிய காரணம்.
அவர் வீசிய 4 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். அவர் 4 ஓவர்களில் மூன்று ஓவர்ரை மெய்டனாக வீசினார். இதன்மூலம் அதிக மெய்டன் ஓவர் வீசிய இந்தியா வீராங்கனை என்ற பெறுமையை பெற்றுள்ளார்.


Next Story