Top
undefined
Begin typing your search above and press return to search.

இம்ரான்கானை தலை குனிய வைத்த பாகிஸ்தான் அமைச்சரின் சர்ச்சை பேச்சு !! “எங்கள் உண்மையான முதலாளி இராணுவம்தான்”!!

இம்ரான்கானை தலை குனிய வைத்த பாகிஸ்தான் அமைச்சரின் சர்ச்சை பேச்சு !! “எங்கள் உண்மையான முதலாளி இராணுவம்தான்”!!

userBy : user

  |  26 Sep 2019 6:01 AM GMT


பாகிஸ்தானில் ஜனநாயகம் துளி அளவும் இல்லை என்றும், அங்கு அந்த நாட்டு இராணுவம்தான் அவர்களுக்கு முதலாளி என்றும் பல ஆண்டுகளாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டு மூத்த அமைச்சரே இந்தியாவின் கருத்தை முன் மொழிவதைப் போல பேசியுள்ளதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் இம்ரான்கான் உட்பட அந்த நாட்டு தலைவர்கள் வருத்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்.


பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் பேசுகையில் “ இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானை ஒழித்துக் கட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளார். இதனால்தான் இம்ரான்கான் கூட காஷ்மீர் விஷயத்தில் இந்தியா சண்டைக்கு வந்தால் அணு ஆயுதத்தை உபயோகிப்போம் என்று கூறினார். நானும் இந்தியாவுக்கு எதிரான போர் வந்தால் அதை செய்து முடிப்பதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளேன்.


இந்தியாவை சமாளிக்கும் விதத்தில் பாகிஸ்தானில் அணு குண்டுகள் உள்ளன, அவை இந்தியாவை குறிவைக்க பயன்படுத்தப்படலாம். எங்களுடைய உண்மையான முதலாளி பாகிஸ்தான் இராணுவம்தான் . அவர்கள் என்ன பேச சொல்கிறார்களோ அல்லது செய்ய சொல்கிறார்களோ அதை செய்து முடிப்பதுதான் எங்கள் வேலை. இம்ரானின் கருத்துக்களும், எங்கள் கருத்துக்களும் ராணுவத்தின் கருத்துக்களே என்று கூறினார்.


இவ்வாறு பேசிய அமைச்சர் ஷேக் ரஷீத் இம்ரான் அமைச்சரவையின் மூத்த அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நானும், இம்ரான் கானும் வெறும் பொம்மைகள்தான் என்றும் ராணுவத்தால் நாங்கள் ஆட்டிப் படைக்கப்படுவதாக அவர் பேசிய பேச்சு இந்தியாவில் இருந்து கொண்டு தேச விரோதமாக இம்ரான்கானை கதாநாயகனாக சித்தரிப்பவர்களுக்கும், இம்ரான் கானுக்கும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.



https://www.indiatoday.in/news-analysis/story 



Next Story