Top
undefined
Begin typing your search above and press return to search.

200 பேரை வேலைக்கு எடுத்து இந்தியாவிற்கு எதிராக போலி செய்தி பரப்பிய பாகிஸ்தான் இராணுவம் - 50 அக்கவுண்டுகளை அதிரடியாக தூக்கிய ட்விட்டர்: அம்பலமான இம்ரான் கானின் குட்டு!

200 பேரை வேலைக்கு எடுத்து இந்தியாவிற்கு எதிராக போலி செய்தி பரப்பிய பாகிஸ்தான் இராணுவம் - 50 அக்கவுண்டுகளை அதிரடியாக தூக்கிய ட்விட்டர்: அம்பலமான இம்ரான் கானின் குட்டு!

saravanaBy : saravana

  |  26 Sep 2019 1:18 PM GMT


போலியாக ட்விட்டர் கணக்குகளை உருவாக்கி இந்தியாவிற்கு எதிராக விஷம தனமான போலி கருத்துகளை பதிவிட்டு வந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பல்வேறு கணக்குகள் முடக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு விதி 370 திரும்ப பெற்றுக்கொண்டதற்கு பின்னர், இந்தியாவுடன் நேரடியாக மோத திராணி இல்லாத பாகிஸ்தான் இராணுவம் உணர்வு ரீதியாக இந்தியாவை தாக்க திட்டமிட்டுள்ளது.


அதன் ஒரு முயற்சியாக போலி சமூக வலைதள கணக்குகள் மூலமாக பொய் செய்தியை பரப்பி மக்களின் உணர்ச்சியை தூண்டி வன்முறை வெடிக்க செய்யும் திட்டத்தை கையிலெடுத்திருக்கிறது பாகிஸ்தான் இராணுவம். ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள 333 ட்விட்டர் கணக்குகள் காஷ்மீருக்கு எதிராக கருத்து பதிவிட்டதை தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனமே தாமாக முன்வந்து அந்த கணக்குகளை எல்லாம் முடக்கியது.


இந்த நிலையில் தற்போது, இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் பெயரில் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் ராணுவம் 200-க்கும் மேற்பட்ட சமூக வலைதள பயனர்களை எடுத்து, இந்தியாவிற்கு எதிராக போலி தகவல் பரப்புவது மட்டுமே முழு நேர வேலையாக கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அது மாதிரியான கணக்குகள் தான் தற்போது முடக்கப்பட்டு வருகின்றன.


பிபின் ராவத் உட்பட பல்வேறு இராணுவ உயர் அதிகாரிகள் பெயரில் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, அவர்களே இந்தியாவிற்கு எதிராக கருத்து பரப்புவது போல சித்தரித்து தகவல் வெளியிட்டு இருந்தனர். இந்திய ராணுவ அதிகாரிகள் யாரும் சீருடையில் சமூக வலைதள பக்கத்தில் இடம்பெற மாட்டார்கள். ஆனால் இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் பெயரில் பாகிஸ்தானில் தொடங்கப்பட்ட போலி கணக்குகள் அனைத்திலும் அதிகாரிகள் சீருடையில் இருப்பது போன்ற படம் பதிவிடப்பட்டு இருக்கிறது.


பிரிவினையை தூண்டி வன்முறை வெடிக்க செய்து, அந்த மூலம் காரியம் சாதிக்கவே பாகிஸ்தான் இந்த முயற்சியை கையிலெடுத்திருக்கிறது. ட்விட்டர் கணக்குகள் மட்டுமல்லாது பாகிஸ்தான் அமைச்சர்கள், பிரபலங்கள் கூட போலி செய்தியை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




https://twitter.com/IndiaToday/status/1174192878001762304

Next Story