Top
undefined
Begin typing your search above and press return to search.

காஷ்மீர் விவகாரத்தில் மூக்குடைப்பு ...பணத்துக்கு கையேந்தும் நிலை எதிரொலி : ஆட்டம் காணத் தொடங்கியது இம்ரான்கான் நாற்காலி!!

காஷ்மீர் விவகாரத்தில் மூக்குடைப்பு ...பணத்துக்கு கையேந்தும் நிலை எதிரொலி : ஆட்டம் காணத் தொடங்கியது இம்ரான்கான் நாற்காலி!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  28 Sep 2019 10:15 AM GMT


பாகிஸ்தானில் இருந்து சமீபத்தில் வந்துள்ள அரசியல் தகவல்கள் படி இம்ரான்கான் மீதும், அவரது அரசின் மீதும் அங்குள்ளவர்களால் நம்பிக்கை வைக்க முடியவில்லை என்றும், இனிமேல் அவர் ஆட்சியை தொடர்ந்து நடத்துவதில் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.


ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்த இந்தியாவின் முடிவுக்கு எதிராக பாகிஸ்தான் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற முயன்றது. ஆனால் உண்மையில் அதன் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதை இம்ரான்கானே ஒப்புக் கொண்டுள்ளார். இந்தியா எடுத்த இந்த முடிவைப் பற்றி சர்வதேச மன்றத்தில் அவர் சரியான விளக்கங்களையும், வாதங்களையும் முன் வைக்காமல் விட்டுவிட்டார் என்றும் இதனால் அவருக்கு சொந்த நாட்டிலேயே கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


370 வது பிரிவு ரத்தான அன்று பாகிஸ்தானில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இம்ரான்கான் இந்திய அரசை கடுமையாக சாடினார். அதற்கு மறுநாள் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இஸ்லாமியர்களின் தலைவர் நதீம் நுஸ்ரத் பாகிஸ்தான் முதலில் தனது சொந்த நாட்டு மக்களுக்கு உரிமை வழங்கட்டும்...பிறகு காஷ்மீர் விவகாரத்தை பற்றி யோசிக்கலாம் என்று கூறினார். இந்த விஷயத்தில் பாகிஸ்தானில் உள்ள அனைத்து இன சிறுபான்மையினரும் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பினர்.


மேலும், பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் சிறுபான்மை மக்கள் தத்தா பானி, ராவலகோட், பூஞ்ச், ஹஜிரா, மற்றும் டட்ரினோட் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகள் ) கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அன்று மாபெரும் முழக்கங்களை எழுப்பினர்.


அதேபோல், அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் இம்ரான் கானின் ஐநா சபை பொதுசபை பேச்சுக்கு முன்னதாக இரண்டு தினங்களுக்கு முன்னதாக நியூயார்க்கில் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினர்.


மேலும் "சிறுபான்மையினரான மொஹாஜிர்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடந்து வருகின்றன, இது பல தசாப்தங்களாக நடந்து வருகிறது, நாங்கள் 25,000 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்துவிட்டோம், ஆயிரக்கணக்கான பேர் காணாமல் போயுள்ளோம். பாகிஸ்தானால் ஏற்பட்ட எங்கள் நிலைமையை உலகுக்கு தெரிவிக்க விரும்புகிறோம், ”என்று மொஹாஜிர் தலைவரும் கராச்சியின் முன்னாள் மேயருமான வசே ஜலீல் கூறியுள்ளார் .


காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக திரும்பி கடைசியில் தோல்வி அடைந்த சங்கடத்தில் தற்போது பாகிஸ்தான் சிக்கியுள்ளது. அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராடி வரும் நிலையில், இம்ரான் கானின் அரசாங்கமும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரிவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. விண்ணை முட்டும் விலைவாசி, அத்தியாவசியப் பண்டங்கள் பற்றாக்குறை, வெளிநாட்டுக் கடன்கள் இவற்றால் பொருளாதாரம் தற்போது கவலைக்குரியதாக மாறியுள்ளது.


பணமில்லாத ஏழை தேசம் என்று முன்பு வருணிக்கப்பட்ட பாகிஸ்தான் அதன் வரலாற்றில் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதை பின்வருமாறு உலக வங்கி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட உலக வங்கி அறிக்கை, அடுத்த மூன்று நிதியாண்டுகளில் இந்தியா தனது வளர்ச்சியை ஆண்டுக்கு 7.5% என்ற விகிதத்தில் தக்க வைத்துக் கொண்டது, அதே சமயம் மற்ற தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி நன்றாக உள்ளதாகவும், ஆனால் பாகிஸ்தான் நாட்டின் வளர்ச்சி வரும் 19-20 ஆம் நிதியாண்டில் 2.7% ஆக குறையும் என கூறியுள்ளது அந்த நாட்டில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நெருக்கடியால் ஏற்பட்ட வலியால்தான் ஈத் பண்டிகையையொட்டி மக்கள் மத்தியில் இம்ரான்கான் பேசுகையில் “ இந்த நெருக்கடியான நேரத்தில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நிலைமையை சமாளிக்க உதவுமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதில் இம்ரான்கான் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உலக நாடுகள் உதவ முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உலக நாடுகள் பாகிஸ்தானில் முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத செயல்பாடுகளை கட்டுப்படுத்த முன்வராததால் பல நாடுகள் முதலீட்டு ஒப்பந்தங்களில் இருந்து பிவான்கின. இதனால் பாகிஸ்தானில் மேலும் துயரங்கள் சூழ்ந்தன. ஆனால் இம்ரான்கான் உண்மையில் தற்போது மூடி மறைக்கிறார்.


பாகிஸ்தான் பொருளாதாரம் சரிவின் விளிம்பில் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளதால் பாகிஸ்தான் மிகுந்த நெருக்கடியில் உள்ளது. அதன் வறிய நிலை உண்மையில் சந்தோஷப்படும் விஷயமல்ல. ஐக்கிய நாடுகள் சபை சென்ற வியாழக்கிழமை வெளியிட்ட ‘வர்த்தக மற்றும் மேம்பாட்டு அறிக்கை 2019’ – யில் சீனா மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவும், ஒரு பெரிய சர்வதேச நாணய நிதியக் கடனும் உடனடிப் பிரச்சினையை தீர்க்க உதவிய போதிலும் பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி தீர்க்கப்படவில்லை என்று கூறியுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபை ஆசிய பிரிவின் பாகிஸ்தான் பற்றிய அறிக்கையின் ஒரு சுருக்கமான கருத்தில், "வளர்ச்சி விகிதம் பாதியாக குறைந்து விட்டதால் பாகிஸ்தான் ஒரு நெருக்கடியின் மத்தியில் உள்ளது" என்று கூறியது. மேலும் திருப்பி செலுத்தும் இருப்பு மோசமான நிலையில் உள்ளதாகவும், ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது என்றும் இதனால் வெளி கடன் பெரிய அளவில் உயரும் என்றும் கூறியுள்ளது.


இம்ரான் கான் காஷ்மீரைப் பற்றி ஒரு குறுநடை போடும் குழந்தையைப் போல சண்டையிடுவதிலும், சிணுங்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ஏற்கனவே பணமில்லாமல் இருந்த அவரது நாடு இன்னும் ஆழமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. ‘ரொட்டி மற்றும் ‘நாண் , தக்காளி மற்றும் பால் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்வதால் அந்த நாடு பிற நாடுகளிடம் கையேந்தி அழுகிறது. விஷயங்கள் இந்த வழியில் தொடர்ந்தால், கூகிள் தேடுபொறியில் தற்போதுள்ள இம்ரான் கானின் படங்களை தூக்கி எறிந்துவிட்டு “பிக்காரி” - “பிச்சைக்காரன்” என்று பொருள்படும் இந்தி வார்த்தையின்படி அவருடைய படம் யதார்த்தமாக மாறக்கூடும்.


ரொட்டி மற்றும் நாணின் விலைகள் பற்றி விவாதிக்க அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த வேண்டிய அவசியத்துக்கு தள்ளப்பட்டுள்ள ஒரு நாடு காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் மீது அணு யுத்தம் மேற்கொள்ள வேண்டி வரும் என்று அடிக்கடி அச்சுறுத்துவது  மிகவும் வேடிக்கையாக உள்ளதாக ஆங்கில செய்தி தாள்களில் அந்த நாடு குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. 


This is a Translated From OP India


Next Story