Top
undefined
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி இந்தியாவிடம் அசிங்கப்பட்ட சீனா!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி  இந்தியாவிடம் அசிங்கப்பட்ட சீனா!

SaravanaBy : Saravana

  |  29 Sep 2019 7:56 AM GMT


ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370 சட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இது பாகிஸ்தானிற்கு பெரிய இடியாக அமைந்தது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ .நா சபை வரை முறையிட்டார் ஆனால் அது தோல்வியில் முடிந்தது.


இந்த நிலையில் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா சபை கருத்தரங்கத்தில் பேசிய பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் வெளியுறவுத்துறைஅமைச்சர் வாங் யி பல காலமாக இருந்து வரும் ஜம்மு- காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா சபை விதிகளின் படியே தீர்க்க வேண்டும்.எனவும், காஷ்மீர் விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் முடிவுகள் எடுக்க கூடாது, பக்கத்து நாடான பாகிஸ்தானுடன் உறவுகள் இதனால் பாதிக்க கூடாது நீடிக்க வேண்டும், என பேசினார். இது தான் சீனாவின் விருப்பம் என தெரிவித்தார்.


சீனாவின் வெளியுறவு அமைச்சர் பேச்சிற்கு பதிலடி தரும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில்


இந்தியாவின் பகுதியான ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்ட திட்டங்களுக்கு எதிராகவும் அண்டை நாடுகளை மதிக்காமல் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து பொருளாதார மண்டலம் அமைக்கும் முயற்சிகளை கைவிட்டு எங்களின் எல்லை பிரச்சனைகளில் இந்திய நாட்டின் இறையாண்மைக்கு அண்டை நாடுகள், சீனா மதிப்பளிக்கும் என நம்புகிறோம் என கூறினார்.


ஜம்மு காஷ்மீரில் பல முன்னேற்றங்கள் காணப்படுகிறது இந்த முன்னேற்றங்கள் எங்கள் நாட்டின் உள்விவகாரம் என்பதையும் சொல்லி கொள்ள விரும்புகிறோம், என சீனாவின் பேச்சிற்கு முக்குடைக்கும் வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story