Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னையில் காவல்துறையினரை கண்டதும் பயந்து ஓடிய காங்கிரஸ் கட்சியினர்

சென்னையில் காவல்துறையினரை கண்டதும் பயந்து ஓடிய காங்கிரஸ் கட்சியினர்

SaravanaBy : Saravana

  |  30 Sep 2019 6:18 PM GMT


சென்னையில் உள்ள ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழா மற்றும் ஐ.ஐ.டி துவங்கி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததன் வைர விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை சென்னை வந்தடைந்தார். பிரதமரை தமிழக முதல்வர் துணை முதலவர், ஆளுநர் அமைச்சர் பெருமக்கள், பா.ஜ.க நிர்வாகிகள் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


விமான நிலையத்தின் வெளியே கூடியிருந்த பா.ஜ.க தொண்டர்கள், மோடி.,மோடி என்ற கோஷத்துடன் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.


பாரத பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டியில் காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கண்டன முழக்கங்களை எழுப்ப முயன்றனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.




https://twitter.com/dinathanthi/status/1178552910294085633?s=19

Next Story