Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க ஆதரவு கோரிய அ.தி.மு.க ! பா.ஜ.க தேசிய பொதுச்செயலார் முரளிதர் ராவிடம் கோரிக்கை!

பா.ஜ.க ஆதரவு கோரிய அ.தி.மு.க ! பா.ஜ.க தேசிய பொதுச்செயலார் முரளிதர் ராவிடம் கோரிக்கை!

SaravanaBy : Saravana

  |  30 Sep 2019 12:52 PM GMT


சென்னையில் ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஐ.ஐ.டி துவங்கி 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதன் வைர விழா இன்று கொண்டாடபட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி காலை சென்னை வந்தடைந்தார், பிரதமரை பா.ஜ.க தேசிய பொது செயலாளர் திரு.முரளிதர் ராவ் தமிழக முதல்வர் துணை முதலவர் ஆளுநர் அமைச்சர் பெருமக்கள், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது வரும் அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் அ.இ.அ.தி.மு.க சார்பில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நாராயணன் போட்டியிடுகிறார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு இன்று சென்னை வந்த தேசிய பொது செயலாளர் முரளிதர ராவ்விடம் , முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்,என செய்திகள் வந்துள்ளது.


Next Story