Top
undefined
Begin typing your search above and press return to search.

கல்குவாரி முறைகேடு! தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் !

கல்குவாரி முறைகேடு! தி.மு.க   துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் !

SaravanaBy : Saravana

  |  30 Sep 2019 8:47 AM GMT


ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி மீது 2012 ஆம் ஆண்டு கல்குவாரி முறைகேடு வழக்கு பதிவு செய்தது தமிழக அரசு.


மதுரையில் உள்ள அய்யம்பாளையத்தில் இருக்கும் கல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இது தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கு பதியப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதும் வழக்கு போடப்பட்டது. 2015 ல் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதி மன்றம், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.


இந்த நிலையில் விசாரணையின் முடிவில் கல்குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு ஐ.பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்


Next Story