Top
undefined
Begin typing your search above and press return to search.

ஈட்டி எறிதலில் வரலாறு படைத்த முதல் இந்தியா பெண்மணி அன்னு ராணி!!

ஈட்டி எறிதலில் வரலாறு படைத்த முதல் இந்தியா பெண்மணி அன்னு ராணி!!

SaravanaBy : Saravana

  |  1 Oct 2019 6:02 AM GMT


உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் பைனலுக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்த முதல் இந்தியா பெண்மணி அன்னு ராணி.


கத்தார் தலைநகர் தோகாவில், 17வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகிறது . பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி போட்டியில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார்.
இதில் 31 பேர் கலந்து கொண்டனர் இதில் 2 பிரிவுகளாக பிரித்து விளையாடினர். ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா 3 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் அன்னு ராணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்து விளையாடினர்.





தனது முதல் வாய்ப்பில் அன்னு ராணி 57.05 மீ., துாரம் எறிந்தார். இரண்டாம் வாய்ப்பில் 62.43 மீ., துாரம் எறிந்தார். இவர் இதில் புதிய தேசிய சாதனை படைத்தார்.
இதற்கு முன்பு பாட்யாலாவில் நடந்த பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் இவர், 62.34 மீ., துாரம் எறிந்தது தேசிய சாதனையாக இருந்தது. பின்பு மூன்றாம் வாய்ப்பில் 60.50 மீ., துாரம் மட்டுமே எறிந்தார்.


அதிகபட்சமாக 62.43 மீ., துாரம் எறிந்து ‘ஏ’ பிரிவில் 3வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 5வது இடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றார். இது மட்டும் இல்லாமல் இவர் உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியா நட்சத்திரம் என்ற புதிய சாதனை படைத்தார்.


Next Story