Top
undefined
Begin typing your search above and press return to search.

கமிஷன் தி.மு.க: 100 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 2 1/2 கோடி கமிஷன் வாங்கி மோசடி செய்த தி.மு.க பிரமுகர்!

கமிஷன் தி.மு.க: 100 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 2 1/2 கோடி கமிஷன் வாங்கி மோசடி செய்த தி.மு.க பிரமுகர்!

SaravanaBy : Saravana

  |  1 Oct 2019 12:19 PM GMT


சென்னையில் 100 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 2 1/2 கோடி கமிஷன் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய திமுக பிரமுகர் முத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.


இராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியை சேர்த்தவர் நிகில் கண்ணா. இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவன வளர்ச்சிக்காக பணம் தேவைப்பட்டுள்ளது. நண்பர்களிடம் விசாரித்ததில் சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான லைன் முத்துவேல் என்ற முத்து கிருஷ்ணன் என்பவரின் தொடர்பு கிடைத்துள்ளது. அவரிடம் கடன் கேட்டு சென்ற பொழுது, 100 கோடி கடன் வாங்கி தர ஏற்பாடு செய்வதாகவும், கமிஷன் 2 1/2 கோடி தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். அதை நம்பி நிகில் கண்ணா கமிஷன் தொகையை கொடுத்துள்ளார்.


ஆனால் கடன் வாங்கி தராமல், ஏமாற்றி வந்துள்ளார் முத்து கிருஷ்ணன். கமிஷன் தொகையை திருப்பி கேட்டதற்கு தரக்குறைவாக பேசியிருக்கிறார். இதனை தொடர்ந்து நிகில் கண்ணா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், முத்து கிருஷ்ணனை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story