Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்து சமய அறநிலையத்துறை கண்ணில் தென்படுமா இந்த கோவில்?

இந்து சமய அறநிலையத்துறை கண்ணில் தென்படுமா இந்த கோவில்?

SaravanaBy : Saravana

  |  2 Oct 2019 8:52 AM GMT


விழுப்புரம் மாவட்டம் ஏழு செம்பொன் பகுதியில் உள்ளது தென்காளத்தீஸ்வரர் சிவன் கோவில்.


ஸ்ரீ ஞான சுந்தரி அம்பாள் உடனாகிய தென் திருக்காளத்தீஸ்வரர் ஆலயத்தில் எவ்வளவோ முயற்சி செய்தும் கோயில் திருப்பணி செய்ய முடியாமல் இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றனர் அந்த ஊர்மக்கள். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.


இப்போது எங்கே பார்த்தாலும் கருப்பாக பாழடைந்த வீடு போல் உள்ளது. பிரகாரத்தில் புதர்கள் முளைத்து காடு போல் காட்சி தருகிறது. அதனால் பக்தர்கள் யாரும் பிரகாரம் வலம் வருவது இல்லை.


கும்பாபிஷேகம் செய்யாமல், முறையாக பூசை செய்யாமல் சிவாலயம் கலை இழந்து நிற்கிறது. அறநிலையத்துறைக்கு இவ்வளவு பழமையான சிவாலயம் இருப்பது கூட தெரியாமல் இல்லை.


ஆனாலும் தொடர்ச்சியாக பல வருடங்களாக புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது. ஏதாவது ஒரு வகையில் தங்கள் ஊரின் அடையாளமாக திகழும் கோவிலை சீரமைக்க வேண்டி உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அவ்வூர் பொதுமக்கள்.




Next Story